பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக மாறிய வாட்ஸ்அப்! உ.பி, பீகாரில் தீயாக பரவும் ரேவண்ணா ஆபாச வீடியோ! போச்சு
பெங்களூர்: ஜேடிஎஸ் எனப்படும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் எச் டி தேவகவுடாவின் பேரன், எச் டி ரேவண்ணாவின் மகன் எம்பி ப்ரஜ்வால் ரேவண்ணாவின் வீடியோக்கள் வடஇந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளன.
கர்நாடகாவை உலுக்கிய எம்பி ப்ரஜ்வால் ரேவண்ணாவின் வீடியோக்கள் தற்போது உத்தர பிரதேசம், பீகாரில் தீவிரமாக பரவி வருகிறது. அங்கே உள்ள வாட்ஸ்அப் குழுக்களில் இந்த வீடியோக்கள் புயலை கிளப்பி உள்ளன.

பொதுவாக பாஜக கட்சிக்கு கை கொடுப்பதே வாட்ஸ்அப் தான். ஆனால் அதே வாட்ஸ்அப் தற்போது பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளது. பாஜகவிற்கு எதிராக எம்பி ப்ரஜ்வால் ரேவண்ணாவின் செக்ஸ் ஸ்கேண்டல் வீடியோக்கள் உத்தர பிரதேசம், பீகாரில் அரசியல் அஸ்திரமாக மாறி உள்ளது.
இன்றைய நிலவரப்படி ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வாட்ஸ்அப்பில் உத்தர பிரதேசம், பீகாரில் மட்டும் பரவி உள்ளன. மூன்றாம் கட்ட தேர்தல்கள் நெருங்கும் நிலையில் இந்த வீடியோக்கள் பாஜகவை உலுக்கி உள்ளது.
கர்நாடக பென் டிரைவ்: கர்நாடகாவில் பென் டிரைவ் ஒன்று மக்கள் இடையே பரவ தொடங்கி உள்ளது. அதேபோல் சில வீடியோக்களும் மக்களிடையே பரவ தொடங்கி உள்ளன.
அந்த வீடியோக்களில் ஜேடிஎஸ் எனப்படும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் எச் டி தேவகவுடாவின் பேரன் எம்பி ப்ரஜ்வால் ரேவண்ணா உள்ளார். அதன்படி அவர் பல பெண்களை கடுமையாக பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோக்கள் பதிவாகி இருக்கின்றன.
ப்ரஜ்வால் ரேவண்ணா மட்டுமல்லாமல் பல ஆண்கள் இந்த வீடியோக்களில் உள்ளனர். இதில் பல வீடியோக்களை ரேவண்ணாவே எடுத்துள்ளதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக பெண்கள் பலரும் கதறும் வீடியோக்கள்,. பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகும் வீடியோக்கள் இதில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவிலேயே மிகப்பெரிய செக்ஸ் ஸ்கேண்டல் ஆக இந்த சம்பவம் மாறி உள்ளது. ப்ரஜ்வால் ரேவண்ணா இந்த விவகாரத்தில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இவருக்கு எதிராக தனி எஸ்ஐடி விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று வெளியிட்டார்.
1000 வீடியோக்கள்: பல ஆயிரம் வீடியோக்கள் இதில் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ப்ரஜ்வால் ரேவண்ணா மூலம் பல ஆயிரம் பெண்கள் கடுமையான துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. முக்கியமாக இவர்கள் கடுமையான பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.
இந்த நிலையில் ப்ரஜ்வால் ரேவண்ணா ஏற்கனவே வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார் என்று கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன் இவரை கைது செய்ய முடியவில்லை. அம்மாநில உள்ளூர் செய்தி சேனல்களின்படி 2700க்கும் மேற்பட்ட வீடியோ கிளிப்புகள் மக்கள் இடையே பரவி உள்ளன. 300 பேர் ரேவண்ணா மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொள்ளாச்சி போல: தமிழ்நாட்டில் பொள்ளாச்சி கொடூரத்தில் அதிமுகவினர் சிக்கி விமர்சனங்களுக்கு உள்ளானது போல அங்கே தற்போது மதசார்பற்ற ஜனதா தளம் சிக்கி உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இது பாஜகவிற்கு எதிராகவும் திரும்பி உள்ளது.
பாஜகவினர் அதிர்ச்சி: ப்ரஜ்வால் ரேவண்ணாவே பதிவு செய்ததாகக் கூறப்படும் பல பெண்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான செக்ஸ் வீடியோக்கள் கொண்ட பென் டிரைவ் அந்த தொகுதியில் தேர்தலுக்கு முன்னதாகவே சுற்றிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதெல்லாம் தற்போது பாஜகவிற்கு பெரிய அளவில் எதிராக திரும்பி உள்ளது. பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக இந்த வீடியோ மாறி உள்ளது. அதிலும் இரண்டு கட்சிகளும் கூட்டணியில் உள்ளன என்பதால் பாஜகவை பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications