பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விமானத்தில் பறப்பதற்கு முன் டிராக்டரில் பயணம்.. மழைநீர் சூழ்ந்ததால் பெங்களூருவில் நடந்த ருசிகரம்..!

Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூரு விமான நிலையம் முன்பாக சாலையில் மழை நீர் சூழ்ந்து நின்றதால், டிராக்டர் ஒன்றின் உதவியை கொண்டு பயணிகள் விமானத்தை பிடித்த ருசிகர நிகழ்வு நடந்துள்ளது.

Recommended Video

    விமானத்தில் பறப்பதற்கு முன் டிராக்டரில் பயணம்.. மழைநீர் சூழ்ந்ததால் பெங்களூருவில் நடந்த ருசிகரம்..!

    முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நின்று சாலை குளம் போல் காட்சியளித்ததால், விமான நிலையத்திற்குள் நுழைய மறுத்த வாடகை கார் ஓட்டுநர்கள் வெளியிலேயே பயணிகளை இறக்கிவிட்டுச் சென்றனர்.

    பல கிலோ எடையுள்ள உடைமைகளை தூக்கிக்கொண்டு, தண்ணீரில் தத்தளித்து நடந்து செல்ல அஞ்சி பயணிகள் தவித்த நிலையில், டிராக்டர் மூலம் அவர்கள் விமான நிலையத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    Roads outside Bengaluru airport flooded, passengers take tractor to reach terminal

    கர்நாடக மாநிலம் முழுவதும் தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. பெங்களூருவை பொறுத்தவரை கடந்த ஒரு வார காலமாக நல்ல மழை பொழிவு இருந்து வருகிறது. இதனால் மாநகரில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதோடு பழமையான மரங்களும் ஆங்காங்கு சாய்ந்துவிட்டன. ராஜாஜி நகர், மெஜஸ்டிக், இந்திரா நகர், விதான் சவுதா, விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மழை கொட்டித் தீர்த்தது.

    இதனால் கெம்பேகவுடா விமான நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. இந்நிலையில் விமானத்தை பிடிப்பதற்காகவும், விமானத்திலிருந்து இறங்கி வீடுகளுக்கு செல்வதற்காகவும் காத்திருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். விமான நிலையத்திற்குள் நுழைய முடியாமல் உடைமைகளோடு பல பயணிகள் வெளியிலேயே காத்திருந்தனர். இதனிடையே டிராக்டர் டிப்பர் மூலம் அவர்கள் ஏற்றிச்செல்லப்பட்டு விமான நிலையத்திற்குள் கொண்டு சென்று இறக்கிவிடப்பட்டனர்.

    சீமானுக்கு வேல்முருகன் அட்வைஸ்: ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கு உபத்திரம் செய்யாதீங்க! சீமானுக்கு வேல்முருகன் அட்வைஸ்: ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கு உபத்திரம் செய்யாதீங்க!

    டிராக்டரில் ஏற யோசித்தால் உள்ளே போர்டிங் போடுவது முதல் இன்னும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால், சற்றும் யோசிக்காமல் விமானத்தில் பறக்க வந்த பயணிகள் பலரும் டிராக்டரில் ஏறி பயணித்தனர். இதேபோல் விமான நிலையத்தில் தவித்த பயணிகள் பலரும் டிராக்டர் மூலம் தங்களை பிக் அப் செய்துகொள்ள வந்த கார்களை நோக்கி வெளியே சென்றனர்.

    இதனிடையே விமான நிலையத்திற்குள் செல்ல முயன்ற பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தம் புதிய சொகுசு கார் ஒன்று தேங்கி நின்ற மழைநீரில் சிக்கி பழுதடைந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Roads outside Bengaluru airport flooded, passengers take tractor to reach terminal
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X