நடிகரின் தலைக்கேறிய போதை.. பெங்களூரில் வேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரபலம்.. யார் இவர்?
பெங்களூர்: பெங்களூரில் திரைப்பட நடிகர் ஒருவர் இரவு நேரத்தில் குடிபோதையில் கார் ஓட்டி சென்று ஓல்டு மெட்ராஸ் ரோட்டில் விபத்தை ஏற்படுத்தினார். இதில் 4 கார்கள் சேதமடைந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் நடிகரின் காருக்கு இன்சூரன்ஸ் இல்லாததும் தெரியவந்தது. இதுதொடர்பாக நடிகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்துள்ளனர். இந்த நடிகர் யார்? பின்னணி குறித்து திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
கன்னட சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருபவர் மயூர் படேல். இவர் நேற்று இரவு பெங்களூரில் ஓல்டு ஏர்போர்ட் ரோட்டில் கார் ஓட்டி சென்றார்.

இரவு 10 மணியளவில் கமாண்டோ மருத்துவமனை சிக்னல் அருகே சென்றபோது அவரது கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் தாறுமாறாக ஓடியது.
தறிகெட்டு ஓடிய அந்த கார் சிக்னலில் நின்று கொண்டிருந்த ஒரு காரின் பின்புறம் மோதியது. இதில் அந்த கார் முன்னோக்கி நகர்ந்து பிற கார்கள் மீது மோதியது. இதனால் சங்கிலி தொடராக அடுத்தடுத்து 4 கார்கள் மோதிக்கொண்டன. ஒல்டு ஏர்போர்ட் ரோடு எப்போதும் பிஸியாக இருக்கும் என்பதால் இந்த விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கன்னட நடிகர் மயூர் படேல் கார் தான் 4 கார்கள் மீது மோதியது தெரியவந்தது. மேலும் அவர் போதையில் இருந்தார். இதனால் அவருக்கு சோதனை மேற்கொண்டது. அப்போது அவர் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி மதுபானம் குடித்து குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, அவர் ஓட்டி சென்ற காரின் இன்சூரன்ஸ் திட்டமும் காலாவதியாகி இருந்தது தெரியவந்தது.
சம்பவம் தொடர்பாக சேதமடைந்த ஒரு காரின் உரிமையாளர் சீனிவாஸ் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் பேரில் போதையில் வாகனம் ஓட்டியது உள்பட பிற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி புகாரளித்த சீனிவாஸ் கண்ணீர் மல்க கூறியதாவது: ‛‛நான் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தான் புதிதாக கார் வாங்கினேன். என் மனைவியின் நகையை அடகு வைத்து இந்த காரை வாங்கினேன். ஒரு தனியார் நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டு, ஊழியர்களை பிக்அப், டிராப் செய்வதற்காக பயன்படுத்தி வந்தேன். ஒவ்வொரு மாதமும் 5ம் தேதி மாதாந்திர தவணை செலுத்த வேண்டும். இந்த விபத்து எனது குடும்பத்தை கடும் நிதி நெருக்கடிக்குள் தள்ளிவிட்டது'' என்று அழுதார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: ‛‛நடிகர் மயூர் படேல் ஃபார்ட்சுனர் காரை ஓட்டி சென்றார். சிக்னலில் அவரது கார் நின்ற கார் மீது மோதியது. அந்த கார் முன்னால் இருந்த காரில் மோதியது. இப்படியாக அடுத்தடுத்து கார்கள் நகர்ந்து சங்கிலி தொடர் விபத்து ஏற்பட்டது. 4 கார்கள் சேதமடைந்தது. சேதமடைந்ததில் 2 ஸ்விப்ட் கார்கள், ஒரு அரசு காரும் அடங்கும். இந்த விபத்துக்கு முக்கிய காரணம் குடிபோதையில் வேகமாக கார் ஓட்டியது தான் முக்கிய காரணம். இன்சூரன்சும் காலாவதியாகி இருந்தது. தற்போது கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடிகர் மயூர் படேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications