சசிகலாவிற்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் - பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி

பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். காய்ச்சல் தீவிரமடையவே அவர் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா கடந்த 2017 பிப்ரவரி மாதம் பெங்களூருவில் உள்ள சிறைக்கு சென்றார். சிறை தண்டனை முடிவடைந்து விட்ட நிலையில வரும் 27ஆம் தேதி அவர் விடுதலையாக உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை டிடிவி தினகரன் கட்சித் தொண்டர்கள் செய்து வரும் நிலையில் இன்றைய தினம் பரப்பன அக்ரஹார சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

Sasikala unwell in Bangalore jail Medical team treatment

சசிகலாவிற்கு சர்க்கரை நோய் உள்ளது. அவ்வப்போது சர்க்கரை அளவு மிக அதிகமாகி உடல் நல பாதிப்பு ஏற்படுவது வழக்கம். கடந்த ஒரு வாரகாலமாகவே சசிகலாவிற்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. இன்றைய தினம் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

உடல் நல பாதிப்பு அதிகரிக்கவே, சசிகலாவை ஆம்புலன்ஸ் மூலம் சிறையில் இருந்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பௌரிங் மருத்துவமனையில் சசிகலாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வரப்போகிறார் என்றுஅவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்திருந்த நிலையில் தற்போது உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் பலரையும் கவலையடைய வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+