கர்நாடகாவில் 'ஸ்டிங் ஆபரேஷன்' புயல்! சித்தராமையாவுக்கு எதிராக.. சிவகுமாரின் சித்து விளையாட்டு?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: "அமைச்சர்களை குறிவைத்து ஸ்டிங் ஆபரேஷன்கள் நடத்தப்படுகின்றன! எனவே உஷாராக இருக்க வேண்டும்" என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியிருப்பது அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியிருக்கிறது. ஆனால், இந்த ஸ்டிங் ஆபரேஷனுக்கு பின்னாடி சிவகுமார்தான் இருக்கிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்புக்கு வந்தபோது.. யாரை முதலமைச்சராக தேர்வு செய்வது என்பது குறித்து பெரிய குழப்பம் நீடித்தது. சித்தராமையா ஒருபுறம், டி.கே.சிவகுமார் ஒருபுறம் என 2 பேருக்கும் இடையில் போட்டி இருந்தது. பிரச்சனையை சரி செய்ய.. ஆளுக்கு பாதி வருடங்கள் ஆட்சி என்று பஞ்சாயத்து பேசி முடிக்கப்பட்டது.

Sting Operation

அதன்படி கடந்த ஜூன் மாதம் சித்தராமையா முதலமைச்சர் பதவியிலிருந்து விலக.. டி.கே புதிய முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். எல்லாம் ஓகேவாகத்தான் போய்க்கொண்டிருந்தது என பலரும் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் இந்த 'ஸ்டிங் ஆபரேஷன்' குண்டு வந்து விழுந்திருக்கிறது. அக்டோபர் முதல் வாரத்தில் கர்நாடக அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் பேசிய முதலமைச்சர் டி.கே, "தனியார் ஏஜென்சிகள் அமைச்சர்களை குறி வைத்து ஸ்டிங் ஆபரேஷன்களை நடத்தி வருகின்றன. உஷாராக இருங்கள்" என்று கூறியிருந்தார்.

அவர் பேசி அடுத்த ஓரிரு நாட்களில் 'கர்நாடகா ஹனிடிராப்' எனும் யூடியூப் சேனலிலும், சில வெப்சைட்களிலும் சித்தராமை குறித்த வீடியோக்கள் வெளியாகின. இதில் சித்தராமையாவின் மாண்பை குறைக்கும் வகையில் காட்சிகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து நீதிமன்றம் போய்.. இந்த வீடியோக்களுக்கு தடை வாங்கினார் சித்தராமையா. வீடியோவை எடுத்தது யார்? எதற்காக இப்போது இதை வெளியிட வேண்டும்? என்று பல கேள்விகள் எழுந்தன.

கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக எதிர்க்கட்சிகள் தற்போது புதிய குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றன. கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் பாஜக எம்பியுமான ஜெகதீஷ் ஷெட்டர், "சித்தராமையா மற்றும் தற்போதைய கேபினட் அமைச்சர்களை கைக்குள் வைத்திருக்கவே ஸ்டிங் ஆபரேஷன் நடந்திருக்கிறது. இதற்கு பின்னால் டி.கே.சிவகுமார்தான் இருக்கிறார்" என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

இவர் போதாது என.. ஜே.டி.(எஸ்) தலைவர் எச்.டி.குமாரசாமியும் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். "சித்தராமையாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, அவரை பதவியிலிருந்து விலக கட்டாயப்படுத்தவே கன்னட சேனல் நிறுவனர் ஒருவர் மற்றும் பத்திரிகையாளர்களை கையில் வைத்துக்கொண்டு ஸ்டிங் ஆபரேஷனை சிவகுமார் நடத்தியிருக்கிறார்" என்று விமர்சித்திருக்கிறார். இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் கர்நாடகாவில் விவாதங்களை கிளப்பியிருக்கின்றன.

குற்றச்சாட்டுகளை டி.கே.சிவகுமார் தரப்பு மறுத்துள்ளது. ஆனால், ஸ்டிங் ஆபரேஷன் குறித்து சிபிஐ, SIT விசாரணைக்கு டி.கே.சிவகுமார் ஓகே சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+