"பெங்களூரில் தமிழக பஸ் உடைப்பு".. திடீரென கல்வீசி கைதான இளைஞர்.. யார் இவர்? பரபரப்பு வாக்குமூலம்
பெங்களூர்: பெங்களூர் டவுன்ஹால் அருகே நேற்று இரவு சென்று கொண்டிருந்த தமிழக அரசு பஸ் மீது திடீரென்று கல்வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கல்வீச்சில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்த நிலையில் கல்வீசிய இளைஞரை டிவைரும், கண்டக்டரும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது.
நம் அண்டை மாநிலம் கர்நாடகா. கர்நாடகாவின் தலைநகரான பெங்களூர் என்பது தமிழ்நாடு - கர்நாடகா எல்லையிலேயே அமைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை தாண்டினால் பெங்களூர் வந்துவிடும். இதனால் தமிழகம் - கர்நாடகா இடையே அரசு பஸ்கள் அதிகமாக இயங்கி வருகின்றன.

தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டிஎன்எஸ்டிசி மற்றும் எஸ்இடிசி பஸ்கள் தமிழ்நாட்டின் வெவ்வேறு இடங்களில் இருந்து பெங்களூர் நோக்கி தினமும் சென்று வருகின்றன. அதேபோல் பெங்களூரில் இருந்தும் தமிழகத்துக்கு கர்நாடகா அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயங்கி வருகின்றன.
எல்லாவற்றுக்கும் கன்னடமா? பெங்களூரை விட்டு வெளியேற முடிவு செய்த பெண்! என்ன நடந்தது?
தமிழகத்தில் இருந்து செல்லும் எஸ்இடிசி பஸ்கள் பெங்களூர் சாந்தி நகர் பஸ் நிலையத்துக்கும், டிஎன்எஸ்டிசி பஸ்கள் பெங்களூர் சேட்டிலைட் பஸ் நிலையத்துக்கு சென்று வருகின்றன. இந்நிலையில் தான் நேற்று இரவு சுமார் 10. 30 மணியளவில் சேட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தமிழக அரசின் டிஎன்எஸ்டிசி பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்த பஸ் பெங்களூர் டவுன்ஹால் அருகே உள்ள பஸ் நிறுத்தத்துக்கு வந்தது. அப்போது இளைஞர் ஒருவரை பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் பஸ் நிற்காமல் சென்றது. இந்த வேளையில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் கல்லை எடுத்து பஸ்சை நோக்கி எறிந்தார். இதில் பஸ்சின் பின்பக்கத்தில் உள்ள கண்ணாடி மீது கல் பட்டது. இதனால் பஸ்சின் கண்ணாடி உடைந்து சிதறியது.
ஐடி ஊழியர்களுக்கு இனி தினமும் 14 மணி நேர வேலை கட்டாயம்.. பரிந்துரைத்த நிறுவனங்களால் அலறும் கர்நாடகா
இதையடுத்து பஸ்சை நிறுத்திய டிரைவர், கண்டக்டருடன் இறங்கி வந்து அந்த இளைஞரை பிடித்தனர். அவர்களிடம் அந்த இளைஞர் வாக்குவாதம் செய்தார். இதுபற்றி உடனடியாக எஸ்ஜே பார்க் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்றனர். இளைஞரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவரது பெயர் மகாராஜா என்பதும், அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் சொந்த ஊர் செல்ல பஸ்சுக்காக காத்து நின்றபோது பஸ் நிற்காமல் சென்றதால் கோபம் அடைந்து கல்வீசியதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பஸ்சும் போலீஸ் நிலையத்துக்கு சென்றது. அதன்பிறகு டிரைவர் - கண்டக்டர் சார்பில் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications