மின்னல் வேகம்.. சாலையோரம் நின்ற லாரி மீது மோதிய கார்.. 13 பேர் உயிரிழப்பு.. கர்நாடகாவில் சோகம்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபுரம் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது டாட்டா சுமோ மோதி விபத்துக்குள்ளானதில் 3 வயது குழந்தை உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து டாட்டா சுமோ ஒன்று பெங்களூர் நோக்கி வந்துகொண்டிருந்தது. இதில், 3 வயது குழந்தை, 4 பெண்கள் உள்பட மொத்தம் 14 பேர் இருந்தனர். இந்த டாட்டா சுமோ கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபுரம் மாவட்டம் பாகெப்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தது. அதே நேரத்தில் நாகாலாந்தில் இருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு வந்திருந்த லாரி ஒன்று அதே சாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது அந்த பகுதியில் அதிகளவு பனிமூட்டம் நிலவியதாக கூறப்படுகிறது. குறிப்பாக முன்னாள் செல்லும் வாகனம் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 14 பேருடன் வந்த டாட்டோ சுமோ கண்ணிமைக்கும் நேரத்தில் சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. டாட்டா சுமோவும் அதி வேகத்தில் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் லாரி மீது மோதியதில் டாட்டா சுமோ சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி 3 வயது குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதையடுத்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 7 பேர் உயிரிழந்தனர். இதேபோல் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
லாரி மீது டாட்டா சுமோ மோதியதில் மொத்தம் 13 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே விபத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் பெங்களூர் ஒங்கசத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், தசரா பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றுவிட்டு திரும்பிய போது விபத்து நேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications