பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூரில் பிரமாண்ட தமிழ் புத்தக திருவிழாவிற்கு ஏற்பாடு.. கல்லூரி மாணவர்களுக்கு மொழிதிறன் போட்டி!

By
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், கர்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் இணைந்து பெங்களூரில் 25.12.2022 முதல் 1.1.2023-ஆம் நாள் வரையில் 8 நாட்களுக்கு நடத்தப்படும் தமிழ்ப் புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக இணையவழியில்
கல்லூரி மாணவர்களுக்கான மொழித்திறன் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

Tamil language skill competition announced for Karnataka collage students ahead of Bangalore Book Fair

ஓவியப் போட்டி- கட்டுரைப் போட்டி- கவிதைப் போட்டி- சொற்பொழிவுப் போட்டி என மொத்தம் ரூ.25 ஆயிரம் பரிசுகளை அள்ள வாய்ப்பு உள்ளது.

முதல் பரிசு: ரூ.3 ஆயிரம்
இரண்டாம் பரிசு: ரூ.2 ஆயிரம்
மூன்றாம் பரிசு: ரூ.1 ஆயிரம்

இவ்வாறு பரிசுத்தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கான நிபந்தனைகளாக, கர்நாடகத்தில் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம்
புகுமுக வகுப்பு, பட்ட வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கேற்கும் மாணவர்களுக்கு மின்-சான்றிதழ் வழங்கப்படும்!
பங்கேற்கும் கல்லூரிகளுக்கு கேடயம் வழங்கப்படும்!

ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து மே.வங்க அமைச்சர் விமர்சனம்- பகிரங்க மன்னிப்பு கோரினார் மமதா பானர்ஜி! ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து மே.வங்க அமைச்சர் விமர்சனம்- பகிரங்க மன்னிப்பு கோரினார் மமதா பானர்ஜி!

தலைப்புகள்:

ஓவியப்போட்டி: நான் எழுதும் நூலின் அட்டைப்படம் (ஏ4 தாளில்)

கட்டுரைப்போட்டி: இந்த நூலை படிக்க மறந்திடாதீங்க! (300 சொற்கள்)

கவிதைப் போட்டி: தமிழே நமது வேர்!(24 வரிகளுக்குள்)

சொற்பொழிவுப்போட்டி: செந்தமிழ் நூலைப்படி! (7 நிமிடங்கள்)

ஓவியங்கள், கட்டுரைகள், கவிதைகளை என்ற [email protected] மின்னஞ்சலுக்கு 20.11.2022-ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும்.
இணையவழியில் சொற்பொழிவுப் போட்டி நடக்கும் நாள்: 20.11.2022 (ஞாயிற்றுக்கிழமை), காலை 10.30 மணி. நடுவர்கள்: பேராசிரியர், முனைவர் கு.வணங்காமுடி, அறிஞர் சு.குமணராசன்.

முன்பதிவுக்கு: https://forms.gle/p4Xa8DgHwy4icy7v8

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
As part of Tamil Book Festival organized by Karnataka Tamil Journalists Association, Karnataka Tamil School and College Teachers Association for 8 days from 25.12.2022 to 1.1.2023 in Bangalore. Language proficiency competitions are conducted for college students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X