காவிரியில் நீர் திறப்பை அதிகரித்த கர்நாடகா.. தமிழகத்திற்கு நீர் வரத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
பெங்களூரு: கா்நாடக மாநிலத்தில் கனமழை மற்றும் நடுவர் மன்ற தீர்ப்பு காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு 20000 கன அடி ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு நீர் வரத்து 14 ஆயிரம் கனஅடியில் இருந்து 15 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை இந்த வருடம் போதிய அளவுஇல்லை. கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பெரிய அளவில் ஏமாற்றி உள்ளது. அதனால் காவிரிக்கு வர வேண்டிய நீர்வரத்து போதிய அளவு இல்லை. கபிரி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் இந்த ஆண்டு போதிய அளவு நிரம்பவில்லை. இதனால் கர்நாடகா கடந்த ஆண்டை போல் தண்ணீரை திறந்துவிடவில்லை. கனமழை பெய்யும் சமயங்களில் உபரி நீரை திறந்து வருகிறது.

இந்நிலையில் மழை போதிய அளவு பெய்யாத காலங்களில் காவிரி நடுமன்ற உத்தரவின்படி இருமாநிலங்களும் தண்ணீரை பகிர்ந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக உச்ச நீதின்றத்தில் தமிழக அரசு முறையிட்டுள்ளது. இந்நிலையில் தான் காவிரி நடுமன்ற உத்தரவின் படி தண்ணீரை திறந்துவிட்டுள்ளது கர்நாடகா. அதேநேரம் அங்கு பெய்த கனமழையால் உபரி நீர் வரத்து அதிகரித்துள்ளது அதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீா்வரத்து இருந்தது. கா்நாடக அணைகளின் நீா் திறப்பினால் தண்ணீா் அதிகரித்து கடந்த புதன்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 6,000 கன அடியாகவும், மதியம் 12 மணிக்கு விநாடிக்கு 8,000 கன அடியாகவும், மாலை நிலவரப்படி விநாடிக்கு 10,000 கன அடியாகவும் அதிகரித்தது.
இந்நிலையில் படிப்படியாக கடந்த இரண்டு நாட்களாக காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தது இதையடுத்து ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி, காவிரி ஆற்றில் பரிசல்களை இயக்குவதற்கு தடைவிதித்தா. இந்தத் தடை உத்தரவின் காரணமாக ஒகேனக்கல் மாமரத்துக் கடவு பரிசல் துறை பூட்டப்பட்டிருக்கிறது.
இதனிடையே கா்நாடக அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரின் அளவு 20 ஆயிரம் கனடியாக உயர்த்தப்படடுள்ளது. பிலிகுண்டுலு பகுதிக்கு நீர் வரத்து 14 ஆயிரம் கனஅடியில் இருந்து 15 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. நீா்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தால் தொடர்ந்து நீர் திறப்பு அதிகரிக்கும்.
இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்திற்குள் (தென்மேற்கு பருவமழை) போதிய மழை பெய்தால் மட்டுமே மேட்டூர் அணை நிரம்பும் இல்லாவிட்டால் இந்த ஆண்டு வறட்சி ஏற்படும் என்பதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். கர்நாடகா பொதுவாக தண்ணீர் அதிகமாக வரும் காலங்களில அதிக அளவு திறந்துவிடும். ஆனால் தண்ணீர்குறைவாக இருந்தால் பெரும் போராட்டத்திற்கு பிறகே, அதவும் குறைந்த அளவு தண்ணீரைத்தான் திறந்துவிடுகிறது. இது பலஆண்டுகளாக தொடர்கிறது. இதனிடையே ஓகேனக்கலில் நீர் வரத்து அதிகரிப்பால் 4வதுநாளாக இன்றும் பரிசல் இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications