சாவர்க்கர் சுதந்திரப் போராட்ட வீரர்.. திப்பு சுல்தான் யார்? காங். கட்சியின் டிகே சிவக்குமார் கேள்வி!
பெங்களூரு: சுதந்திரத் தினத்தை முன்னிட்டு பெங்களூருவில் வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தானின் பேனர் கிழிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு சுதந்திரனம் தினம் ஆசாதி கா அம்ரித் மகா உத்சவ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு வீடுதோறும் மூவர்ணக் கொடி என்ற இயக்கத்தை அறிவித்துள்ளது. அதாவது பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன்போ அல்லது மொட்டை மாடியிலோ இரவு, பகல் என வித்தியாசம் பாராமல் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடியை ஏற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசியக் கொடி விற்பனை அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின கொண்டாட்டம்
அது போல் சமூகவலைதளங்களின் முகப்பில் தேசியக் கொடியை அனைவரும் டிபியாக வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் கர்நாடகாவின் பெங்களூரு நகரில் காங்கிரஸ் கட்சி சார்பாக சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் பேனர்களாக வைக்கப்பட்டுள்ளது. அதில் திப்பு சுல்தானின் பேனரும் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் சுதந்திர தினத்தன்று, காங்கிரஸ் கட்சி சார்பாக தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திப்பு சுல்தான் பேனர் கிழிப்பு
இந்த நிலையில் திப்பு சுல்தானின் பேனரை அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் டிகே சிவக்குமார் சம்பவத்தை பார்வையிட்டார். இதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் பெங்களூரு நகரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

டிகே சிவக்குமார் கண்டனம்
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், சிறையில் இருந்து வெளிவந்து ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய சாவர்க்கர் விடுதலைப் போராட்ட வீரர் என்றால், ஆங்கிலேயர்களுக்கு எதிரான 4 போரில் ஈடுபட்டு பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டு போரில் இறந்த திப்பு சுல்தான் சுதந்திர போராட்ட வீரர் இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து இதுபோன்ற செயல்களை யார் செய்திருப்பார்கள் என்று தெரியும். அவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அரசு மீது விமர்சனம்
இந்த நேரத்தில், அனைவரும் மத்திய அரசின் தொல்லியல் துறைக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று கூற விரும்புகிறேன். இங்கு திப்பு சுல்தானின் அரண்மனை உள்ளது. அந்த இடத்தை விளக்குகளால் மத்திய அரசு அலங்கரித்து கொண்டாடி உள்ளது. மத்திய அரசு கூட அனைத்து சுதந்திர போராட்ட தியாகிகளையும் மரியாதையுடன் நடத்துகிறது. ஆனால் மாநில அரசு அப்படியல்ல என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications