கர்நாடகா: எடியூரப்பா மனைவி, சித்தராமையா மகன் 'மரணங்கள்'- மத்திய அமைச்சர் ஷோபா- மாநில அமைச்சர் மோதல்!
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் சித்தராமையா மகன் ராகேஷ், கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மனைவி ஆகியோரது மரணங்களை முன்வைத்து மத்திய அமைச்சர் ஷோபா மற்றும் கர்நாடகா அமைச்சர் பைரதி சுரேஷ் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. எடியூரப்பா மனைவியின் மர்ம மரணத்துக்கு மத்திய அமைச்சர் ஷோபாதான் காரணம் என்கிறார் மாநில அமைச்சர் பைரதி சுரேஷ்; ஆனால் சித்தராமையா மகன் ராகேஷ் மரணத்துக்கு காரணமே பைரதி சுரேஷ்தான் என்கிறார் மத்திய அமைச்சர் ஷோபா.
கர்நாடகா மாநில அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முடா எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், முதல்வர் சித்தராமையா மனைவிக்கு வீட்டு மனைகள் ஒதுக்கிய விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முடா வழக்கின் ஆவணங்களை மாநில அமைச்சர் பைரதி சுரேஷ் எரித்துவிட்டதாக மத்திய அமைச்சர் ஷோபா குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கு பதிலளித்த மாநில அமைச்சர் பைரதி சுரேஷ், முன்னாள் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான எடியூரப்பாவின் மனைவி மர்மமாக மரணம் அடைந்ததற்கு காரணமே மத்திய அமைச்சர் ஷோபாதான் என பகீர் குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தம் மீதான அமைச்சர் பைரதி சுரேஷின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் ஷோபா பதிலளித்துள்ளார். அதில், மாநில முதல்வர் சித்தராமையாவின் மகன் ராகேஷ் மரணத்துக்கு காரணமே மாநில அமைச்சர் பைரதி சுரேஷ்தான். முடா நில முறைகேடு விவகாரத்தில் சித்தராமையாவை சிக்க வைத்ததும் பைரதி சுரேஷ்தான். சித்தராமையா சொத்துகளை பைரதி சுரேஷ் அபகரிக்க முயற்சித்தார்; இதற்கு தடையாக இருந்ததால் சித்தராமையா மகன் ராகேஷை அமைச்சர் பைரதி சுரேஷ் கொலை செய்ததாக மக்கள் பேசுகின்றனர். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். மத்திய மாநில அமைச்சர்களின் பரஸ்பர குற்றச்சாட்டுகளால் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications