பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இயற்கை மருத்துவம்..ஆமை வடிவில் பிரமாண்ட கட்டடம்.. பெங்களூரில் திறந்து வைக்கும் யோகி ஆதித்யநாத்!

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகத்தில் பிரமாண்டமாக ஆமை வடிவில் கட்டப்பட்டுள்ள தனியாருக்கு சொந்தமான ஸ்ரீ தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் மையத்தை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்க உள்ளார்.

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. அதேநேரத்தில் பாஜகவை தோற்கடிக்க பாஜக திட்டம் தீட்டி வருகிறது.

இதனால் தற்போதே கர்நாடக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி ஆகியோர் தொடர்ந்து கர்நாடகத்துக்கு சென்று வருகின்றனர்.

 வைகை அணையில் 4,000 கனஅடி தண்ணீர் திறப்பு.. 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! வைகை அணையில் 4,000 கனஅடி தண்ணீர் திறப்பு.. 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 யோகி ஆதித்யநாத் வருகை

யோகி ஆதித்யநாத் வருகை


இந்நிலையில் தான் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு நாள் பயணமாக கர்நாடக தலைநகர் பெங்களூர் செல்ல உள்ளார். பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் பெங்களூர் புறநகர் மாவட்டம் நெலமங்களா செல்கிறார். அங்கு ஷேமாவனா எனும் பெயரில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் மையத்தை திறந்து வைக்க உள்ளார்.

21 ஏக்கர் பரப்பளவில்...

21 ஏக்கர் பரப்பளவில்...

இந்த மையத்தை 21 ஏக்கர் பரப்பளவில் எஸ்டிஎம் குழு கட்டியுள்ளது. கட்டடத்தின் மேற்புறத்தல் ஆமை போன்ற வடிவமைப்பில் கட்டடம் பிரமாண்டமாக கட்டப்பபட்டுள்ளது. பிரபல கட்டிடக்கலைஞரான மகேஷ் டியோபோடால் திட்டத்தில் வடிவமைப்பாளர் ஆயுஷ் கஸ்லிவால் மூலம் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதில் 400 பேர் வரை தங்கும் வசதி உள்ளது. 86 சிறப்பு அறைகள், 30 டீலக்ஸ் அறைகள், 16 காட்டேஜ், 16 தனிஅறைகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும் யோகா, தியானம் உள்ளிட்டவற்றுக்கு தனித்தனி இடம் உள்ளது.

முதல்வர் பங்கேற்பு

முதல்வர் பங்கேற்பு

இந்த விழாவில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆதிசுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதியான நிர்மலானந்த சவாமி உள்பட பலர் பங்கேற்க உள்ளார். மேலும் சமீபத்தில் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்ட தர்மஸ்தலா கோவில் தர்மதிகாரி வீரேந்திர ஹெக்டே தலைமையில் விழா நடைபெற உள்ளது. இந்த வேளையில் தேர்தல் தொடர்பாக அவர்கள் அரசியல் நிலவரம் தொடர்பாக சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

இயற்கை உணவு

இயற்கை உணவு

இதுபற்றி வீரேந்திர ஹெக்டே கூறுகையில், ‛‛மக்களின் ஆரோக்கியமான வாழ்வுக்காக இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் விரும்பி வரும் இடமாக இதனை மாற்றியுள்ளோம். கெரோனா காலத்தில் மக்கள் அதிக சிரமத்தை சந்தித்தனர். பொருளாதார இழப்பை சந்தித்தனர். தற்போது அவர்கள் ஓய்வின்றி உழைக்கின்றனர். இவர்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். இதனால் தான் இவர்களுக்காக ஓய்வு எடுக்கும் வகையில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு வருபவர்களுக்கு இயற்கை முறையிலான உணவுகளுடன் புத்துணர்ச்சி மையமாக இது செயல்படும்'' என்றார்.

English summary
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath is set to inaugurate the privately-owned Sri Dharmasthala Manjunatheswara Center for Naturopathic Medicine and Yogic Science in Karnataka, built in the shape of a gigantic tortoise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X