சீனாவை விடுங்க.. அதைவிட இந்தியா, அமெரிக்காவிலும் நிலைமை ரொம்பவே மோசம்! வெளியான பரபர ரிப்போர்ட்
பெங்களூர்: சைபர் தாக்குதல்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனிடையே 2022இல் ஹேக்கர்களால் அதிகம் குறிவைக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
இந்தாண்டு இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மீதான சைபர் தாக்குதல் பல மடங்கு அதிகரித்தது. இது தொடர்பான ஆய்வு ஒன்றில் சர்வதேச அளவில் அதிகப்படியான சைபர் தாக்குதல்களை எதிர்கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா டாப் இடத்தில் உள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு அதிக சைபர் தாக்குதல்களை எதிர்கொண்ட நாடாகச் சீனா இருந்த நிலையில், இப்போது இந்தியாவில் அதை காட்டிலும் கூடுதலாக சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.

நான்கு நாடுகள்
அமெரிக்கா, இந்தியா, இந்தோனேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் சைபர் தாக்குதல்களில் அதிகம் குறிவைக்கப்பட்ட நாடுகளாக உள்ளன. குறிப்பாக அரசு அமைப்புகள் அல்லது நிறுவனங்களின் தளங்களைக் குறிவைத்து மட்டும் சுமார் 40% தாக்குதல்கள் நடந்தன. 2021ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவின் அரசுத் துறையைக் குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்கள் 95% வரை அதிகரித்துள்ளது.

சைபர் தாக்குதல்
சைபர் தாக்குதல்கள் முதலில் எப்போதும் பணத்தைக் குறிவைத்து மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. அதாவது, ஒரு தளம் அல்லது அமைப்பை ஹேக்கர்கள் முடக்கிவிடுவார்கள். அதில் இருந்து யாராலும் எந்தவொரு தகவல்களையும் எடுக்க முடியாத சூழல் ஏற்படும். அவர்கள் கேட்கும் தொகையைச் செலுத்தினால் மட்டுமே முடக்கியதை விடுவிப்பார்கள். அதிலும் பெரும்பாலும் இவர்கள் க்ரிப்டோகரன்சி மூலமாகவே பணத்தை வாங்குவார்கள் என்பதால் அதை டிரேஸ் செய்வது கிட்டத்தட்ட முடியாத காரியமாகிவிடும்.

புது தகவல்
ஆனால், இப்போது அந்த நிலை மெல்ல மாறி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது பணத்தைத் தாண்டி, அரசியல் மற்றும் மத ரீதியான காரணங்களுக்காகவும் நடைபெறும் சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. 'XVigil' என்ற சைபர் தாக்குதல்களை முன்கூட்டியே அறியும் செயற்கை நுண்ணறிவு அமைப்பு தான் இந்த கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது. சைபர் உளவுத்துறை தாக்குதல் கண்காணிப்பு உதவியுடன் இந்த விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இந்திய அமைப்புகள்
இந்தியாவில் உள்ள அரசு நிறுவனங்கள் பிஷிங் முறை ஹேக்கிங்கில் அதிகம் சிக்கிவிடுகின்றன. சமீபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் ஹேக் செய்யப்பட்டது அனைவருக்கும் நினைவில் இருக்கும். பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவில் ஹேக்கிங் நடைபெறுகிறது. இருப்பினும் 'டிராகன் ஃபோர்ஸ்' என்ற மலேசிய அமைப்பே அதிக ஹேக்கிங்கை நடத்துகின்றன. தகவல் திருட்டு மற்றும் ஹேக்டிவிசம் (Data breach and hacktivism) ஆகியவை இந்தியாவில் அதிகம் நடந்த சைபர் தாக்குதல்களாக உள்ளன.

இந்தியா
இந்தாண்டு நடந்த பெரும்பாலான தாக்குதல்கள் பணத்தைப் பறிக்கும் நோக்கில் நடத்தப்பட்டவை தான். ஆனால், இந்த டிரெண்டிங்கில் சில மாறுதல்களும் தெரிகின்றன. அதாவது, ஒரு குறிப்பிட்ட அரசியல், மத அல்லது பொருளாதார இலக்குகளுக்கு ஆதரவை அல்லது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலான ஹேக்கிங் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் சைபர் தாக்குதல்களில் அதிகம் குறிவைக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. இங்குள்ள அரசு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் தளங்கள் அதிகம் குறிவைக்கப்பட்டவையாக மாறிவிட்டன.

சீனா
இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிகம் குறிவைக்கப்பட்ட நாடாகச் சீனா உள்ளது. சீனா மீது நடந்த தாக்குதல்களில் 96% "AgainstTheWest" என்ற குழுவால் நடத்தப்பட்டது. தைவான் மற்றும் உய்குர் சமூகத்திற்கு எதிரான சீன அரசின் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் எதிர்ப்புகளைக் கிளம்பின. அதேபோல கொரோனா வைரசையும் சீனா தான் உலகெங்கும் திட்டமிட்டுப் பரப்பியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவின. இதுபோன்ற தகவல்களும் சீனாவின் நடவடிக்கைகளும் தான் சீனா மீதான சைபர் தாக்குதல்களை அதிகரித்துள்ளது.

ரஷ்யா
அதேபோல உக்ரைன் போர் ரஷ்யா மீது சைபர் தாக்குதல் அதிகரிக்கக் காரணமாக அமைந்துவிட்டது. உக்ரைன் மீது கடந்த பிப். மாதம் ரஷ்யா திடீரென போரை ஆரம்பித்தது. இந்தப் போர் பல மாதங்களைக் கடந்தும் இன்னும் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் காரணமாக ஆத்திரமடைந்த பலரும் ரஷ்யா மீது சைபர் தாக்குதல்களை நடத்தத் தொடங்கினர். இது தவிர
அமெரிக்கா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்தாண்டு சைபர் தாக்குதல் அதிகம் நடந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
-
50 ஆண்டுகளில் நடக்காத ஒன்று.. தென் மாநிலங்களுக்கு தண்டனையா! 1971 vs 2026.. அனல் பறக்கும் அரசியல்! -
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
இந்தியாவில் முதல்முறை! சிறந்த பணியிட மகிழ்ச்சி விருதுகள் அறிமுகம்! ஹர்ஷ் கோயங்கா தலைமையில் மெகா டீம் -
அடுத்த தலைமுறைக்கான 'டிஜிட்டல் தங்கம்'.. உலகையே கண்ட்ரோலில் எடுக்கும் சீனா.. அப்போ இந்தியா எங்கே? -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... தண்ணீர் ஊற்றி சரி செய்யும் டெலிவரி ஊழியர்! கொடுமையை பாருங்க! -
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
ஈரான் - அமெரிக்கா மோதல்.. சீனுக்குள் வரும் சீனா! 4 அம்ச திட்டம்.. ஜி ஜின்பிங் போடும் பலே பிளான்? -
கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.. அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா! -
சீனாவுக்காக ஹார்முஸ் நீரிணையை நிரந்தரமாக திறக்கிறேன்.. டிரம்ப் சொன்ன மேட்டர்! -
டிரம்பிடம் பணிந்த சீனா? ஹார்முஸில் அமெரிக்க கடற்படை செய்த மெகா சம்பவம்! ஜலசந்தியில் பதற்றம்! -
ஸ்கெட்ச் ஈரானுக்கு இல்ல, சீனாவுக்கு.. அமெரிக்காவின் Blockade-க்கு பின்னால் தந்திரமான திட்டம்.. முறியடிக்கும் ஜி ஜின்பிங்












Click it and Unblock the Notifications