எல்லை மீறிய காதலன்.. கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமான பெண்ணுக்கு விபரீதம்.. 11 பேர் தலைமறைவு
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் சிந்து பரவன்னவர், சரத் நீலப்பா ஆகியோர் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்கள். ஆசை வார்த்தை கூறி காதலன் எல்லை மீறினாராம். இதில் சிந்து கர்ப்பமான நிலையில், காதலன் திருமணத்துக்கு மறுத்துவிட்டாராம். இதனால் வேதனை அடைந்த பெண் விபரீத முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இந்த விவகாரத்தில் தலைமறைவான அவரது காதலன் உள்பட 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
காதலிப்பது இன்றைக்கு சர்வ சாதாரண ஒன்றாக இருக்கிறது. அதேபோல் இளம் ஜோடிகள் எல்லை மீறி பழகுவதும் அதிகமாக உள்ளது. ஒரு கட்டத்தில் நடவடிக்கை பிடிக்காமல் அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிரியும் போது, இருவரில் ஒருவரால் தாங்கி கொள்ள முடிவது இல்லை..இதில் சிலர் போலீசில் புகார் அளித்து சிறையில் தள்ளுகிறார்கள். சிலர் ஏமாற்றியவர்களை சிறையில் தள்ளாமல் வாழ்க்கையை முடித்துக்கொள்வது போன்ற தவறான முடிவெடுக்கிறார்கள். கர்நாடகாவில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டம் சங்கரி கொப்பா கிராமத்தைச் சேர்ந்த 25 வயதாகும் சிந்து பரவன்னவர் என்ற இளம் பெண்ணும், ராணிபென்னூர் தாலுகா குடாரிஹெல் கிராமத்தைச் சேர்ந்த சரத் நீலப்பா என்ற இளைரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கல்யாண ஆசை வார்த்தை கூறி சிந்துவுடன், சரத் நீலப்பா உல்லாசம் அனுபவித்து வந்தாராம்.
இதனால் சிந்து கர்ப்பமானார். ஆனால் இதை கேள்விப்பட்ட சரத் நீலப்பா, சிந்துவை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதையடுத்து சரத் நீலப்பாவின் தங்கையும், தனது கல்லூரி தோழியுமான காவியாவிடம் நடந்த விவரத்தை சிந்து கூறியிருக்கிறார். ஆனால் காவியாவும் சிந்துவை மிரட்டினாராம்.
இதனால் மனமுடைந்த சிந்து கடந்த 7-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டார். சிந்துவின் முடிவுக்கு சரத் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என்று கூறி இளம் பெண் சிந்துவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சிந்துவின் உடலை சரத்தின் வீட்டின் முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பின்னர் இந்த சம்பவம் குறித்து பைதகி போலீசில் சிந்துவின் அண்ணன் புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் சிந்துவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலன் சரத் நீலப்பா, அவருடைய தந்தை சுரேஷ், தாய் புட்டவா, தங்கை காவியா, உறவினர்கள் சச்சின், சந்திரப்பா, ரோஹன், ராஜப்பா, ரவி நாகப்பா, ஹாலப்பா மைலப்பா மற்றும் சரத்தின் நண்பர் சங்கரகவுடா கதுரா ஆகிய 11 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள். போலீசார் வழக்கு பதிவு செய்வதை அறிந்த 11 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.












Click it and Unblock the Notifications