Bangalore IAF Officer: கன்னடர் அடித்ததாக நாடகமாடி அம்பலப்பட்ட பெங்களூர் விமானப் படை அதிகாரி! பாய்ந்தது கொலை முயற்சி கேஸ்
பெங்களூர்: பெங்களூரில் விமானப்படை அதிகாரி மீது பைக்கில் வந்தவர் தாக்கியதாகவும், அவர் ரத்தம் சொட்ட சொட்ட வீடியோ வெளியிட்டு இருந்தார். மேலும் கன்னடம் பேசும் மக்கள் விமானப்படை அதிகாரிக்கு சப்போர்ட் செய்யாமல் பைக்கில் வந்தவருக்கு ஆதரவாக என்னை திட்டியதாக கூறியிருந்தார். இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சி வெளியான நிலையில் விமானப்படை அதிகாரி மீதே கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர் சிவி ராமன் நகரில் உள்ள டிஆர்டிஓ பேஸ் 1 டவுன்ஷிப்பில் வசித்து வருபவர் ஷிலாதித்யா போஸ். இவர் இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் மதுமிதா. இவரும் விமானப்படையில் தான் பணியாற்றி வருகிறார். மதுமிதா Squadron Leader ஆக செயல்பட்டு வருகிறார்.

ஷிலாதித்யா போஸ் தனது மனைவி மதுமிதா உடன் நேற்று காலை 6.20 மணியளவில் காரில் வீட்டில் இருந்து விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து ஒரு பைக் வந்தது. திடீரென்று பைக்கில் வந்தவருக்கும், காரில் சென்ற ஷிலாதித்யா போஸ்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. மாறி மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் ஷலாதித்ய போஸின் முகத்தில் இருந்து ரத்தம் வடிந்தது. இதையடுத்து அவரை மனைவி மதுமிதா காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மேலும் காரில் ரத்தம் சொட்ட சொட்ட ஷிலாதித்ய போஸ் நடந்த சம்பவம் தொடர்பாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், ‛‛எங்களுக்கு பின்னால் ஒரு பைக் வந்தது. அந்த பைக்கில் வந்தவர் எங்களின் காரை நிறுத்தினார். கன்னட மொழியில் திட்டினார். எனது காரில் டிஆர்டிஓ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. அதனை பார்த்தவர் நீங்கள் டிஆர்டிஓவை சேர்ந்தவர்களா என்று கூறி என்னையும், எனது மனைவியையும் மோசமாகி திட்டினார். காரை விட்டு நான் இறங்கினேன். அப்போது அந்த நபர் என்னை தாக்கினார். நெற்றியில் சாவியை வைத்து தாக்கினார். ரத்தம் கொட்டியது.
நான் அங்கு நின்று, ‛நாங்கள் உங்களை பாதுகாக்கிறோம். நீங்கள் எங்களை இப்படித்தான் பாதுகாப்பீர்களா?. ராணுவம், விமானப்படை, கடற்படையை சேர்ந்த ஒருவரை இப்படித்தான் நடத்துவீர்களா?' என்று கத்தினேன். அப்போது அங்கிருந்தவர்களும் சேர்ந்து என்னை திட்டினர். அந்த நபர் ஒரு கல்லை எடுத்து தாக்கினார். அது என் தலையில் தாக்கியது.
எனது மனைவிக்கு நன்றி. அவர் தான் என்னை அழைத்து வந்தார். போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால் போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. கர்நாடகா ஏன் இப்படி மாறிவிட்டது? என்ற கேள்வி எழுந்துள்ளது. என்னால் நம்பவே முடியவில்லை. கடவுள் நமக்கு உதவட்டும் '' என்று கூறினார்.
இதற்கிடையே ஷிலாதித்ய போஸ் மற்றும் பைக்கில் சென்றவர் இடையே நடந்த பிரச்சனை என்பது சாலையோரம் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சியில் பதிவானது. அந்த வீடியோ வெளியாகி பரவி வருகிறது.
அதில் ஷிலாதித்ய போஸ் தான் பைக்கில் சென்றவரை பிடித்து இழுத்து சென்று கீழே தள்ளி தாக்குவதும், அவரை மிரட்டுவது போன்ற ஆக்ஷன் செய்வதும் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் யார் முதலில் யாரை அடித்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் அதிகாரி குத்துச் சண்டையில் நன்கு பயிற்சி பெற்றிருப்பார் போல. கடுமையாக தாக்கியிருப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தான் ஷிலாதித்ய போஸின் மனைவி மதுமிதா சார்பில் பையப்பனஹள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதில் பைக்கில் வந்தவர் காரில் மோதியதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பைக் பதிவெண்ணையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தன்னை தாக்கிய நபர் தொடர்பான போட்டோவை விமானப்படை அதிகாரி ஷாலாதித்ய போஸ் பகிர்ந்துள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் விகாஷ் குமார் என்பது தெரியவந்துள்ளது.
அதேபோல் கைதான நபர் சார்பிலும் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விமானப்படை அதிகாரி ஷிலாதித்ய போஸ் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஷிலாதித்ய போஸ் தனது டேஷ் கேமரா வீடியோவை போலீசிடம் தரவில்லை. ஆளும் தலைமறைவாகியுள்ளார்.
I am in tears watching this. 😐
— Ar_V (@A_V_Speaks) April 21, 2025
It's so disheartening to see how he is getting kicked brutally. #ArrestShiladityaBose#ArrestWingCommander #JusticeForKannadiga#JusticeforKannadigas pic.twitter.com/sC2iXnIN28
இது ஒருபுறம் இருக்க கன்னட மொழி விவகாரத்தில் பிரச்சனை நடந்ததாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் கர்நாடகா மக்கள் விமானப்படை அதிகாரி ஷிலாதித்ய போஸ்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். அவரை சஸ்பெண்ட் செய்து கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
இதுதொடர்பாக பெங்களூர் கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் தேவராஜ் கூறுகையில், ‛‛இந்த சம்பவம் என்பது மொழி அல்லது வேறு பிராந்திய வேறுபாடு உள்ளிட்ட பிரச்சனைகளின் அடிப்படையில் நடந்தது இல்லை என்பதை நிச்சயமாக கூற முடியும். இதுதொடர்பான உண்மை மற்ம் ஆதாரங்கள் திரட்டப்பட்டு உள்ளது. இது பெங்களூரில் தினமும் நடக்கும் road rage விவகாரம் தொடர்பானது'' என்றார். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வுருகிறது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications