30 வயதுதான்.. எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை செய்து கொண்டது ஏன்? இதுதான் உண்மையான காரணம்!
பெங்களூர்: பாஜக கட்சியை சேர்ந்த கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா நேற்று முதல்நாள் தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
எடியூரப்பாவின் முதல் மகள் பத்மாவிற்கு பிறந்தவர்தான் சவுந்தர்யா. 30 வயதே ஆகும் இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அவரை குடும்பத்தினர் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா
மருத்துவரான சவுந்தர்யா பெங்களூரில் இருக்கும் எம்எஸ் ராமையா மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவரின் கணவரும் மருத்துவர்தான். இவர்களுக்கு 6 மாத குழந்தை இருக்கிறது. பெங்களூரில் இருக்கும் மவுண்ட் கேரமல் கல்லூரி அருகே உள்ளே குடியிருப்பில் இவர்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் இவர் திடீரென வீட்டு அறையில் தனியாக இருக்கும் போது தற்கொலை செய்து கொண்டார்.

சவுந்தர்யா தற்கொலை
இந்த நிலையில் சவுந்தர்யாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் அரகா தன்யேந்திரா தெரிவித்துள்ளார். அதில், சவுந்தர்யா கடந்த சில வாரங்களாக postpartum எனப்படும் மன அழுத்தம் காரணமாக கஷ்டப்பட்டு வந்தார். இதற்கு அவர் சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். இது அவரின் வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரியும். தொடர்ந்து மன அழுத்தம் காரணமாக போராடியவர் அதனால் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை காரணம்
இந்த தற்கொலைக்கு வேறு காரணம் எதுவும் இல்லை. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்கு முன் தனது பேத்தியை சந்தோசமாக வைத்துக்கொள்ள எடியூரப்பா கூட சவுந்தர்யாவை சில சமயம் தனது வீட்டிற்கு குடும்பத்தோடு அழைத்து இருக்கிறார். ஆனால் சவுந்தர்யா தொடர்ந்து மன அழுத்தம் காரணமாக கஷ்டப்பட்டுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் சவுந்தர்யாவின் மன அழுத்தம் கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று உள்துறை அமைச்சர் அரகா தன்யேந்திரா தெரிவித்துள்ளார்.

மன அழுத்தம்
தற்கொலை செய்து கொண்ட சவுந்தர்யா, Postpartum depression (PPD) எனப்படும் மன அழுத்தம் காரணமாக கஷ்டப்பட்டு இருக்கிறார். இது பொதுவாக குழந்தை பெற்ற பெண்களுக்கு பிரசவத்தில் இருந்து 4-5 வாரங்களில் ஏற்பட கூடிய மன அழுத்த பிரச்சனை ஆகும். சில பெண்களுக்கு இது மிக தீவிரமாக இருக்கும். அதேபோல் நீண்ட நாட்களுக்கு தொடரும். உடலில் ஏற்படும் கெமிக்கல், ஹார்மோன், உடல் ரீதியான மற்றும் மன ரீதியான மாற்றங்களால் PPD ஏற்படும்.

Postpartum depression
அதேபோல் உடலில் கர்ப்பம் தரிக்கும் போது பெண்களுக்கு estrogen மற்றும் progesterone அளவு 10 மடங்கு அதிகரிக்கும். டெலிவரிக்கு பின் இது சட்டென குறையும். இதனால் உடலில் நிறைய கெமிக்கல் மாற்றங்கள் ஏற்படும். இதுவும் கூட இந்த மன அழுத்தம் ஏற்பட காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை பெற்ற பெண்கள் பலருக்கு இந்த PPD பிரச்சனை சமீப காலங்களில் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications