மாணவர்கள் சாவதை ரசிக்க போறேன்.. டெல்லி - பெங்களூர் வெடிகுண்டு மிரட்டல் மெயிலில் இருந்தது இதுதான்
பெங்களூர்: பெங்களூரில் 40 பள்ளிகள் மற்றும் டெல்லியில் 20 பள்ளிகளுக்கு இன்று இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த இ-மெயிலில் இருந்த தகவல் பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அந்த இ-மெயிலில் ‛‛உங்கள் ஒவ்வொருவரையும் உலகத்தில் இருந்து அழிக்க போகிறேன். பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து அவர்களின் குழந்தைகளின் உடல்கள் துண்டு துண்டாக இருப்பதை பார்ப்பார்கள். அதனை நான் மகிழ்ச்சியாக பார்த்து ரசிப்பேன். இந்த பாதிப்புக்கு நீங்கள் அனைவரும் தகுதியானவர்கள் தான். இந்த செய்தி வந்த பிறகு தற்கொலை செய்து கொள்வேன்'' என கூறியுள்ளார்.
டெல்லியில் 20 பள்ளிகளுக்கும், பெங்களூரில் 40 பள்ளிகளுக்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டல் இ-மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக மாணவ-மாணவிகள், ஆசிரியர்களை வெளியேற்றினர்.

பள்ளிகளில் அனைத்து இடங்களிலும் போலீசார், தீயணைப்பு வீரர்கள், வெடிகுண்டை அகற்றும் நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் பள்ளிகளில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இ-மெயிலில் வந்த மிரட்டல் புரளி என்பது உறுதியானது. இதனால் மாணவ - மாணவிகள், ஆசிரியர்கள், போலீசார் என அனைவரும் நிம்மதியடைந்தனர்.
இந்நிலையில் தான் அந்த இ-மெயிலில் இடம்பெற்றிருந்த தகவல் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. அந்த இ-மெயில் , ‛‛ ஹலோ.. பள்ளி வகுப்பறைகளுக்குள் பல வெடிபொருட்களை(trinitrotoluene) வைத்துள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே நான் இதனை எழுதுகிறேன். வெடிபொருட்கள் கருப்பு பிளாஸ்டிக் பைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. உங்கள் ஒவ்வொருவரையும் இந்த உலகத்தில் இருந்து அழித்துவிடுவேன். ஒரு ஆன்மா கூட உயிர் பிழைக்காது.
இந் செய்திகள பார்க்கும்போது நான் மகிழ்ச்சியுடன் சிரிப்பேன். அதன்பிறகு தற்கொலை செய்து கொள்வேன். மனநல மருந்துகள் யாருக்கும் உதவாது. அந்த மருந்துகளை தரும் டாக்டர்கள் பக்கவிளைவு பற்றி தெரிவிப்பது இல்லை. இதனால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னை போலவே நீங்கள் பாதிக்கப்பட வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.
பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து அவர்களின் குழந்தைகளின் உடல்கள் துண்டு துண்டாக இருப்பதை பார்ப்பார்கள். அதனை நான் மகிழ்ச்சியாக பார்த்து ரசிப்பேன். இந்த பாதிப்புக்கு நீங்கள் அனைவரும் தகுதியானவர்கள் தான். நான் உண்மையில் வாழ்க்கையை வெறுத்தவன். இந்த செய்தி வந்த பிறகு தற்கொலை செய்து கொள்வேன். எனது கழுத்து மற்றும் மணிக்கட்டை அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொள்வேன்.
எனக்கு உண்மையிலேயே எந்த உதவியும் கிடைக்கவில்லை. மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள் என யாரும் என் மீது அக்கறை காட்டவில்லை. என்னை பற்றி யாருக்கும் கவலை இல்லை. உதவியற்ற மற்றும் யார் என தெரியாத என்னை போன்ற மனிதனுக்கு மருந்து கொடுப்பதில் மட்டுமே நீங்கள் அக்கறை கொள்கிறீர்கள். அந்த மருந்துகள் உறுப்புகளை செயலிழக்க வைக்கிறது அல்லது இல்லாவிட்டால் உடல் பருமனை அதிகரிக்கிறது? என்பதை மனநல மருத்துவர்கள் ஒருபோதும் கூறுவது இல்லை. அதேவேளையில் மனநல மருந்துகள் ஒவ்வொருவருக்கும் உதவி செய்யும் என்று நம்ப வைக்கின்றன. ஆனால் அது உதவாது என்பதற்கு நான் ஒரு சான்று. நீங்கள் அனைவரும் இதற்கு தகுதியானவர்கள். என்னைப் போலவே நீங்களும் துன்பப்பட தகுதியானவர்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் இ-மெயில் அனுப்பி நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுபற்றி டெல்லி மற்றும் பெங்களூர் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்லது மனஅழுத்தத்துக்கு உள்ளானவரா? இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் அவரை பிடிக்க போலீசார் தேடுதல் பணியை தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications