பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

4-ஆவது முறையாக முதல்வரான எடி.. தகுதிநீக்கத்தால் என்ன நடக்கும்.. முழு பதவிகாலத்தை பூர்த்தி செய்வாரா?

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக சட்டசபையின் 17 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டதால் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெறும் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ்- மஜத ஆட்சி நடந்து வந்தது. இதில் அதிகார போட்டி, முக்கிய அமைச்சரவை உள்ளிட்டவைகளால் அதிருப்தி அடைந்த இவர்களில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏவுடன் சேர்த்து 16 பேர் ராஜினாமா செய்தனர். மற்றொரு எம்.எல்.ஏ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் 17 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை.

கடந்த வியாழக்கிழமை இரு காங்கிரஸ் எம்எல்ஏக்களான மகேஷ் கும்தஹள்ளி, ரமேஷ் ஜார்கிகோலி , ஒரு சுயேச்சை எம்எல்ஏ சங்கர் என 3 பேரை சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதிநீக்கம் செய்தார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியது. இதில் தோல்வி அடைந்ததால் அந்த ஆட்சி கவிழ்ந்தது.

நூலிழை மெஜாரிட்டியுடன் எடியூரப்பா..... விடிவதற்குள் வஞ்சம் தீர்க்குமா ஜேடிஎஸ்-காங்? நூலிழை மெஜாரிட்டியுடன் எடியூரப்பா..... விடிவதற்குள் வஞ்சம் தீர்க்குமா ஜேடிஎஸ்-காங்?

பதவியேற்பு

பதவியேற்பு

105 பாஜக எம்எல்ஏக்கள், ஒரு சுயேச்சை என 106 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இந்த நிலையில் நேற்று முன் தினம் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பு

எனினும் அவரது அரசு வரும் 31-ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் எடியூரப்பாவோ நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வரவுள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் ரமேஷ்குமார் மேலும் 14 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தார். இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.

104 இருந்தால் போதும்

104 இருந்தால் போதும்

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் இது பரபரப்பை ஏற்படுத்தியது. 224 சட்டசபை தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபையில் தற்போது எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 207-ஆக குறைந்துள்ளது. இதில் பெரும்பான்மைக்கு 104 இருக்க வேண்டும்.

எடியூரப்பாவின் ஆட்சி தொடரும்

எடியூரப்பாவின் ஆட்சி தொடரும்

இந்த நிலையில் பாஜகவிடம் 105 எம்எல்ஏக்கள், ஒரு சுயேச்சையின் ஆதரவு என 106 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே பெரும்பான்மையை காட்டிலும் ஓரிரண்டு கூடுதலாகவே உள்ளது. இதனால் முதல்வர் எடியூரப்பாவின் ஆட்சி தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
What will happen rebel mlas 17 were disqualified? Is there any issue for Yediyurappa government?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X