நஞ்சு நஞ்சம்மா.. பிஞ்சுன்னு கூட பார்க்கலயே.. சித்ராவுக்கு செதில் செதிலா உரியுதே.. இவரும் ஒரு பெண்ணா
பெங்களூரு: மாணவி சித்ராவுக்கு பள்ளியில் தேர்வு நடந்து வருகிறது.. ஆனால் சித்ரா பரீட்சை எழுத போகவில்லை.. என்ன காரணம் என்று விசாரித்தபோதுதான், இப்படி ஒரு பயங்கரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கர்நாடகா மாநிலம், தும்கூர் மாவட்டத்தில் உள்ளது நிட்காட்டே என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் நரசம்மா. இவரது மகள் சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 10 வயதாகிறது.. மதுகிரி தாலுகா புஜரஹள்ளி கிராமத்தில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்..
நஞ்சம்மா: கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அதாவது சித்ராவுக்கு 6 வயதாக இருக்கும்போதே நரசம்மா இறந்துவிட்டார்.. எனினும், சித்ரா பெயரிலும், நரசம்மாவின் அம்மா நஞ்சம்மா பெயரிலும் வங்கியில் "ஜாய்ன்ட் அக்கவுண்ட்டில்" 4 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிவராத்திரி பண்டிகைக்காக ஊருக்கு வந்த நரசம்மாவின் அம்மா நஞ்சம்மா, கடந்த 9-ம் தேதி இரவு பேத்தி சித்ராவை தன்னுடைய ஊருக்கு அழைத்து சென்றிருக்கிறார்.. பிறகு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் குறித்து விசாரித்துள்ளார் பாட்டி நஞ்சம்மா.. அந்த பணத்தை எடுத்து தருமாறும் சித்ராவிடம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு சித்ரா ஒப்புக்கொள்ளவில்லை.
பாட்டி கொடுமை: இதனால் ஆத்திரமடைந்த நஞ்சம்மா, சித்ராவின் கைகளை இறுக்கமாக கட்டிப்போட்டுவிட்டு, அயன் பாக்ஸ் எடுத்து வந்து, சித்ராவின் தொடையிலேயே சூடு வைத்தார்.. அதுமட்டுமல்ல, வலியால் கத்திவிட கூடாது என்பதற்காக, சித்ராவின் வாயை, நஞ்சம்மாவின் மகன் பசவராஜ் இறுக்கமாக பொத்திக்கொண்டாராம்.
தொடையில் சூடு வைத்தும், சித்ராவால் கதறவும் முடியாமல் அனலாய் துடித்திருக்கிறாள்.. இதனால் சித்ராவின் தொடை பகுதியே வெந்து போய்விட்டது.. இதை பற்றி வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று நஞ்சம்மா தன்னுடைய பேத்தியை மிரட்டியுமிருக்கிறார்.
பரீட்சை: இப்படிப்பட்ட சூழலில், சித்ராவுக்கு பள்ளியில் தேர்வு ஆரம்பமாகி உள்ளது.. இது முக்கியமான பரீட்சை என்பதால், சித்ரா பள்ளிக்கு வராதது குறித்தும், தேர்வு எழுதாதது குறித்தும் விசாரிக்க முயன்றபோதுதான், இந்த கொடுமை தெரியவந்துள்ளது.
விஷயத்தை கேள்விப்பட்டதுமே பள்ளி ஆசிரியர்கள், உறவினர்கள் என மொத்த பேரும் சித்ராவை பார்க்க திரண்டு சென்றார்கள்.. தொடையிலிருந்த பெரிய கொப்பளத்தை பார்த்து விக்கித்து நின்றார்கள்.. பிறகு என்ன நடந்தது என்று சித்ராவிடம் விசாரித்திருக்கிறார்கள்..
அதிர்ச்சி: உடனே நஞ்சம்மா குறுக்கே வந்து, "காபி குடிக்கும்போது, தெரியாமல் தொடையில் ஊற்றிக் கொண்டதாகவும், அதனால்தான் சித்ராவின் தொடையில் காயம் ஏற்பட்டதாகவும் சொன்னார். ஆனால் சித்ரா, அனைவர் முன்பும் நடந்த உண்மையை போட்டு உடைத்துவிட்டாள்..
இதைக்கேட்டதுமே ஆசிரியர்களும், உறவினர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக படவனஹள்ளி போலீசுக்கும் விஷயத்தை கொண்டு சென்றார்கள்.. போலீசாரும் விரைந்து வந்து இது தொடர்பான வழக்கு பதிவு செய்துள்ளனர். சித்ராவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடந்துக்கொண்டிருக்கிறதாம்... இப்போது போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் வசமாக சிக்கியிருக்கிறார் "நஞ்சு" நஞ்சம்மா..!!












Click it and Unblock the Notifications