Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RCB அணி விற்பனை.. வாங்குவதற்கு அதானி முதல் 6 பெரும் கோடீஸ்வரர்கள் போட்டா போட்டி.. லிஸ்ட் இதோ

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஐபிஎல்-லில் நடப்பு சாம்பியனாக இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை விற்பனை செய்வதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாகவும், ஆர்சிபி அணியை வாங்க தொழிலதிபர் கவுதம் அதானி உள்பட 6 பேர் இடையே கடும் போட்டி உள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆர்சிபி அணியின் மதிப்பு எவ்வளவு? அணியை வாங்க போட்டிபோடும் 6 பேரின் பின்னணி என்ன? என்பது பற்றிய முழு விவரங்களை இங்கு பார்க்கலாம்.

ஐபிஎல் 18 வது சீசனில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து பெங்களூரில் ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். 47 பேர் காயமடைந்தனர்.

who-will-buy-rcb-diageo-initiates-sale-discussions-and-from-adani-to-adar-poonawalla-6-bidders-line

ஐபிஎல்லில் கடந்த 17 ஆண்டுகளாக கோப்பை என்பது ஆர்சிபி அணிக்கு பெரும் கனவாகவே இருந்தது. ஆனால் இந்த சீசனில் கோப்பையை வென்றாலும் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் - பலி ஆகியவை ஆர்சிபி அணி ரசிகர்களை பெரும் துக்கத்தில் ஆழ்த்தியது. இந்த விவகாரத்தில் ஆர்சிபி அணி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்கு ஆர்சிபி அணியை விற்பனை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது
தற்போது ஆர்சிபி அணியின் உரிமையாளராக ‛யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட்' நிறுவனம் உள்ளது. இது Diageo நிறுவனத்தின் கீழ் வருகிறத. இந்த நிறுவனம் பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மதுபான நிறுவனமாகும்.

இந்நிலையில் தான் அந்த நிறுவனம் ஆர்சிபி அணியை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஐபிஎல் தொடரை எடுத்து கொண்டால் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுக்கு அணிகளுக்கு தான் அதிக ரசிகர்கள் உள்ளன.

அதிலும் குறிப்பாக அணியின் மதிப்பை எடுத்து கொண்டால் சென்னை, மும்பை அணிகளை பின்னுக்கு தள்ளி பெங்களூர் அணி முதலிடத்தில் உள்ளது. பெங்களூர் அணியின் தற்போதைய மதிப்பு என்பது 2 பில்லியன் டாலராக உள்ளார். அதாவது இந்திய மதிப்பில் ரூ.17,859 கோடியாக உள்ளது. இப்படியான சூழலில் தான் ஆர்சிபி அணியை Diageo நிறுவனம் விற்பனை செய்ய உள்ளதாகவும், இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது அதன்படி ஆர்சிபி அணியை வாங்க 6 பேர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

* அதில் முதலிடத்தில் இருப்பவர் ஆதார் பூனவல்லா. இவர் சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் சிஇஓவாக உள்ளார். இந்த நிறுவனம் தான் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை தயாரித்தது. இவர் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வமாக உள்ளார். இதனை அவர் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் ஆர்சிபி சிறந்த அணி.. சரியான மதிப்பீடு கொண்ட அணி என்று குறிப்பிட்டு இருந்தார்.

* இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருப்பது ஜேஎஸ்டபிள்யூ குழுமம். இந்த குழுமத்தை சேர்ந்த பார்த் ஜிண்டால் தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இணை உரிமையாளராக உள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் மற்றும் ஜிஎம்ஆர் குழுமம் 50 சதவீத பங்கை வைத்துள்ளது. ஆனால் பார்த் ஜிண்டால் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார். அவர் ஆர்சிபி அணியை வாங்க வேண்டும் என்றால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளராக இருக்க முடியாது.

* அதேபோல் 3வது இடத்தில் பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின் அதானி குழுமம் உள்ளது. கவுதம் அதானி கடந்த 2022ம் ஆண்டிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணியை வாங்க ஆர்வம் காட்டினார். ஆனால் அது சாத்தியமாகவில்லை. டோரண்ட் குழுமம் அந்த அணியை வாங்கியது. இதையடுத்து மகளிர் பிரிமீயர் லீக்கில் குஜராத் ஜியாண்ட்ஸ் அணியை அதானி குழுமம் வாங்கியது. அதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் ஐஎல்டி20 தொடர்களில் அதானி குழுமம் முதலீடு செய்து வருகிறது. இதனால் ஆர்சிபி அணியையும் வாங்க அதானி குழுமம் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

* இவர்கள் தவிர டெல்லியை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரும், அமெரிக்காவை சேர்ந்த 2 பங்கு சந்தை சார்ந்த நிறுவனங்களும் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. இப்படி ஆர்சிபி அணியை கைப்பற்ற 6 நிறுவனங்கள் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+