ஆஹா.. ‛சந்திரயான்’ என்பதன் அர்த்தம் தெரியுமா? பெயர் வைத்தது வாஜ்பாயாமே! பின்னணியில் ‛சமஸ்கிருதம்’
பெங்களூர்: சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் இந்தியா நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் நிலவு பயண திட்டத்துக்கு முதலில் சோமயான் என பெயர் வைக்கப்பட்டு இருந்ததும், அதனை மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மாற்றி சந்திரயான் என பெயரிட்டதும், அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் விஷயமும் தற்போது வெளியாகி உள்ளது.
இந்தியா சார்பில் நிலவை ஆய்வு செய்ய முதலில் சந்திரயான் 1 திட்டம் கடந்த 2008 ம்ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் நிலவில் நீர்மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த 2019ல் சந்திரயான் - 2 திட்டம் விண்ணில் ஏவப்பட்டது.

நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கி ஆய்வு செய்வதே இதன் நோக்கமாகும். இந்த சந்திரயான் -2 திட்டம் என்பது ஆர்ப்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை உள்ளடக்கியது. ஆர்ப்பிட்டர் நிலவின் சுற்றுவட்டபாதையில் சுற்றிவரும்படி நிலைநிறுத்தப்பட்டது. மாறாக நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை ‛சாப்ட் லேண்டிங்' முறையில் தரையிறக்கியபோது விழுந்து நொறுங்கியது.
அதன்பிறகு சந்திரயான் - 2 ஆர்ப்பிட்டர் மட்டும் நிலவில் சுற்றி வருகிறது. இத்தகைய சூழலில் சந்திரயான் 2 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து பாடம் கற்று இஸ்ரோ விஞ்ஞானிகள் மீண்டும் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் -3 திட்டத்தை உருவாக்கினர். ஏற்கனவே நிலவில் ஆர்ப்பிட்டர் இருப்பதால் சந்திரயான் 3ல் உந்துவிசை கலன், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை ராக்கெட்டில் வைத்து விண்வெளிக்கு அனுப்பினர்.
இதையடுத்து கடந்த 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டப்படி விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் ‛சாப்ட் லேண்டிங்' முறையில் தரையிறங்கியது. இதன்மூலம் நிலவில் தரையிறங்கிய நாடுகளின் பட்டியலில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா வரிசையில் இந்தியா 4வது இடம் பிடித்தது. அதோடு நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
தற்போது நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் மற்றும் அதில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் ஆகியவை ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விக்ரம் லேண்டர், ரோவர் உள்ளிட்டவை அதிதொழில்நுட்ப கேமரா மூலம் நிலவை போட்டோ, வீடியோ எடுத்து இஸ்ரோவுக்கு அனுப்பி வருகிறது. இந்த சந்திரயான் - 3 வெற்றி என்பது இந்திய விண்வெளி துறையில் மற்றொரு மைல்கல்லாக அமைந்துள்ளது.
இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நிலவு ஆய்வுக்கான இந்திய விண்வெளி திட்டங்களுக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் என்பது சந்திரயான் இல்லை என்பதும், முதலில் வைத்த பெயர் சோமயான் என்பதும் தெரியவந்துள்ளது. அதோடு சோமயான் என்ற பெயரை மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மாற்றி சந்திரயான் என பெயரிட்டதும், அதன் பின்னணி தகவலும் வெளியாகி உள்ளது.
அதாவது இஸ்ரோ சார்பில் நிலவு குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அப்போது அது 1999ம் ஆண்டு. இதையடுத்து நிலவு ஆய்வுக்கு அப்போது பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாயிடம் ஒப்புதல் அளித்தார். இநு்த சமயத்தில் இஸ்ரோ சார்பில் ‛சோமயான்' என நிலவு ஆய்வு பயணத்துக்கு பெயரிடப்பட்டது. இதை பார்த்த பிரதமர் வாஜ்பாய் பெயரை மாற்றினார்.
சோமயான் என்பது ரிக்வேத காலத்தில் பயன்படுத்தப்பட்ட சொல்லாகும். இதற்கு ‛‛ஓ சந்திரனே'' என்பது அர்த்தமாகும். ஆனால் வாஜ்பாய் இதனை விரும்பவில்லை. ஏனென்றால் நிலவு குறித்த ஆராய்ச்சியை இந்தியா தொடர்பு செய்ய வேண்டும். இதனால் சோமயான் என்பது சரியான பெயராக இருக்காது. மாறாக சந்திரயான் என வைத்து கொள்வோம். சந்திர பயணம் என்பதை குறிக்கும் வகையில் சந்திரயான் என வைத்து கொள்வோம் என்றார்.
மேலும் சந்திரயான் என்பதற்கு சமஸ்கிருதத்தில் நிலவுக்களம், நிலவு பயணம் என்ற அர்த்தங்கள் வரும் என்பதால் இந்த பெயரை வாஜ்பாய் தேர்வு செய்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகளே பல பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தான் சந்திரயான் என்ற பெயரில் இந்தியாவின் விண்வெளி பயணங்கள் தொடங்கி சந்திரயான் 1, சந்திரயான் 2, சந்திரயான் 3 என்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது நிலவில் ஆய்வு செய்யும் ரோவரின் பெயரான பிரக்யான் என்பதும் சமஸ்கிருத பெயராகும். இதன் தமிழ் அர்த்தம் என்பது ஞானம்/அறிவு என்பதாகும். அதேபோல் நிலவில் தரையிறங்கிய லேண்டருக்கு விக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயர் என்பது இந்திய விண்வெளி ஆய்வின் தந்தை என போற்றப்படும் விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் நினைவாக சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications