பெங்களூருவில் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் சம்பவம்? அதிர வைத்த பெண்ணின் புகார்
பெங்களூர்: ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதுடன் மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற தனியார் நிறுவன ஊழியர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பெங்களூரில் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் சம்பவம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பெங்களூர் பசவனகுடி பகுதியை சேர்ந்தவர் பூர்ணசந்திரா என்ற தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்திற்கு பிறகு, கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு கூறி பூர்ணசந்திரா தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வரதட்சணை வாங்கி வர அவரது மனைவி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பூர்ணசந்திரா தினமும் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தாராம்.

ஒருகட்டத்தில் தனது மனைவியை, அவரது பெற்றோர் வீட்டிற்கு செல்லுமாறு கட்டாயப்படுத்தியாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த பெண்ணின் சகோதரர் உடனடியாக ரூ.2 லட்சத்தை பூர்ணசந்திராவிடம் கொடுத்திருக்கிறார். எனினும் தனக்கு கூடுதலாக ரூ.8 லட்சம் வேண்டும் என கேட்டு மனைவியை அடித்து கொடுமை செய்தாராம்.
இந்த நிலையில் பூர்ணசந்திரா, மனைவியை தன்னுடைய நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. நண்பர்களுடன் உல்லாசமாக இருக்குமாறு தனது மனைவியை பூர்ணசந்திரா கட்டாயப்படுத்தி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அதற்கு மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த பூர்ணசந்திரா தனது மனைவியை ஆபாசமாக வீடியோ எடுத்து , தனது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கவில்லை என்றால், ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டினாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், கணவனுக்கு எதிராக பெங்களூர் பசவனகுடி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பூர்ணசந்திராவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவியை நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க கட்டாயப்படுத்திய சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பூர்ணசந்திரா மற்றும் அவரது நண்பர்கள் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் கும்பலை சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்..
மேற்கத்திய நாடுகளில் உள்ளது போன்று கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் முறை நடந்தது. சென்னையிலும் இப்படி ஒரு புகார் அண்மையில் எழுந்தது. இந்நிலையில் பெங்களூரிலும் அதேபோன்று மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் சம்பவம் நடந்ததா என்றும் இந்த சம்பவத்தை வைத்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications