For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீபாவளி நாளில் பங்குச்சந்தைகளில் முகூர்த்த வர்த்தகம் - நவ.7ல் நல்ல நேரம்

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 7 ஆம் தேதி மாலை 5 மணி முதல் பங்குச்சந்தைகளில் முகூர்த்த வர்த்தகம் நடைபெற உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளியை முன்னிட்டு இந்த ஆண்டு முகூர்த்த வர்த்தகம் நவம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த வணிகம் 6.40 மணி வரையில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்களுக்கு நடைபெறும். இதனை மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 35000 புள்ளிகளைக் கடந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 10,760 புள்ளிகளை கடந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காரணமாக பங்குச்சந்தைகள் கடந்த சில மாதங்களாகவே பெரும் சரிவை சந்தித்தன.

Diwali Muhurat trading 2018: NSE,BSE trading time on 7 November

தீபாவளி பண்டிகை நாளில் தன திரயோதசி முதல் அமாவாசை வரை லட்சுமி பூஜை, குபேர பூஜை செய்வது வட இந்தியர்களின் வழக்கம். பங்குகளில் முதலீடு செய்வார்கள். பலர் தங்க நகைகளை வாங்குவார்கள்.

ஆண்டு தோறும் தீபாவளியை முன்னிட்டு புதிய கணக்கு தொடங்குவதை எடுத்துக்காட்டும் விதமாக பங்குச்சந்தைகளில் முகூர்த்த வர்த்தகம் நடத்தப்படுவது வழக்கம். இது இந்த பிரத்யேக வர்த்தக நேரம் பொதுவாக மாலை நேரத்திலேயே இருக்கும்.

அந்த வகையில், இந்த ஆண்டு முகூர்த்த வர்த்தகம் நவம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த வணிகம் 6.40 மணி வரையில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்களுக்கு நடைபெறும். இதனை மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் தெரிவித்துள்ளன.

English summary
Diwali Muhurat trading will be conducted on the festival day itself, 7 November 2018. Diwali Muhurat trading will begin from 5:00 pm and will last till 6:40 pm, BSE and NSE said in separate notices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X