Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரான் போர்: தங்கம் விலைக்கு அடுத்தடுத்து செக்.. நாளை சந்தை எப்படி இருக்கும்?

Subscribe to Oneindia Tamil

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை 21 மணி நேரம் நீடித்த பிறகு எந்த உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிந்துள்ளது. இந்தச் செய்தி முதலீட்டு சந்தைகளில் பெரும் பதற்றத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது. இதனால் தங்கம் விலை திங்கட்கிழமை எவ்விதமான போர் தாக்குதல் துவங்கப்படவில்லை எனில் லேசான ஏற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் கடந்த ஒரு மாதத்தில் தங்கம் ஏற்கெனவே கணிசமாக விலை குறைந்திருப்பதால், இந்த உயர்வு மிகப் பெரிய அளவில் இருக்காது என்றும் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தங்கம் பாரம்பரியமாக பாதுகாப்பான முதலீட்டு சொத்தாகக் கருதப்படுவதால், பதற்றம் அதிகரிக்கும் போது முதலீட்டாளர்கள் அதை நோக்கி திரும்புகின்றனர். ஆனால் ஈரான் போரில் அதிகம் விற்கப்பட்ட சொத்துக்களில் மிகவும் முக்கியமானதாக இருந்தது.

Gold Silver Iran War US Iran Talks Fail Gold MCX Gold Monday Outlook Gold Geopolitical Risk Failed Ceasefire Gold Price Iran Pakistan Talks Gold Impact MCX outlook 2026 failed US Iran talks gold price gold mildly bullish Monday MCX gold June futures outlook spot gold 4749 COMEX gold April 2026 geopolitical risk gold surge 8 26 gold one month correction Strait of Hormuz disruption gold Pakistan ceasefire talks collapse gold JD Vance Iran announcement gold gold safe haven demand Monday Asian market gold open gold volatility tomorrow gold bullish case MCX gold neutral bearish case failed talks MCX 4749 2026 8 26 MCX

தற்போதைய தங்க விலை நிலவரம்

தற்போது சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸுக்கு 4,748 முதல் 4,749 டாலர் வரை வர்த்தகமாகிறது. COMEX தங்க ஃபியூச்சர்ஸ் 4,748.50 டாலருக்கு அருகில் உள்ளது. இந்திய MCX-யில் ஜூன் மாத தங்க ஃபியூச்சர்ஸ் 10 கிராமுக்கு 1,51,745 ரூபாய் என்ற அளவில் முடிவடைந்தது. ஸ்பாட் மற்றும் ஃபியூச்சர்ஸ் விலை இடையேயான வித்தியாசம் மிகக் குறைவாக உள்ளது. இதன் மூலம் சந்தையில் பிரீமியம் விலை இல்லை என்பதைக் காட்டுகிறது. கடந்த ஒரு மாதத்தில் தங்கம் 8.26 சதவீதம் விலை குறைந்துள்ளது. ஆனால் ஆண்டு அடிப்படையில் இன்னும் 46.81 சதவீதம் உயர்வில் உள்ளது.

பேச்சுவார்த்தை தோல்வியால் என்ன பாதிப்பு

பாகிஸ்தான் மீடியேட்டராக இருந்து நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஹார்முஸ் நீரிணை, எரிசக்தி சந்தை மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது. இது தங்க விலையை லேசாக உயர்த்தும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

ஆனால் கடந்த ஐந்து வாரங்களில் தங்கம் ஏற்கெனவே பயத்தின் காரணமாக உயர்ந்து, பின்னர் லாபம் பார்த்து விற்கப்பட்டு, விலை குறைந்துள்ளது. எனவே இப்போது புதிய பதற்றம் ஏற்பட்டாலும், முழுமையான பெரிய உயர்வு உடனடியாக வர வாய்ப்பில்லை.

நாளை (திங்கள்) சந்தை எதிர்பார்ப்பு

நாளை ஆசிய சந்தைகள் திறக்கும் போது தங்க விலை லேசான ஏற்றத்துடன் தொடங்கலாம். பேச்சு தோல்வி புதிய பதற்றத்தை ஏற்படுத்துவதால் ஆரம்பத்தில் உயர்வான போக்கு இருக்கும். ஆனால் புதிய ராணுவ தாக்குதல் ஏதும் நடைந்தால் இந்த ஏற்றம் சரிவு பாதைக்கு செல்லும். தங்கம் தற்போது ஜனவரி மாத உச்ச விலையான 5,608.35 டாலரில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. எனவே பயத்தின் பிரீமியம் ஏற்கெனவே பெருமளவு குறைந்துவிட்டது.

கடந்த ஒரு மாத போர் சூழ்நிலை அடிப்படையில் கணக்கிட்டால் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தோல்வி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்.

உயரும் வாய்ப்பு: ஈரான் - அமெரிக்கா மத்தியிலான பேச்சு தோல்வி தற்காலிகமானது என்று சந்தை நம்பினால், ஸ்பாட் தங்கம் 4,780-4,800 டாலருக்கு செல்லலாம். MCX-யில் 1,52,500 முதல் 1,53,300 ரூபாய் வரை உயரலாம்.

மந்தமான நிலை: பதற்றம் அதிகமாக இருந்தாலும் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கும் நிலையில் விலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.

மோசமான நிலை: இன்று இரவில் டிரம்ப் புதிய அறிவிப்புகள் வெளியிட்டு தாக்குதலை நடத்தினால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பத்திர முதலீடுகள் அதிகரித்து தங்கம் தொடர்ந்து சரிவு பாதைக்கு இருக்கும்.

இந்திய MCX சந்தைக்கு என்ன பொருள்?

இந்திய வர்த்தகர்களுக்கு MCX தங்க விலை நாளை சர்வதேச தங்க விலை, டாலர்-ரூபாய் விகிதம் மற்றும் உள்ளூர் பாதுகாப்பு முதலீட்டாளர்களின் வாங்கும் எண்ணிக்கை ஆகிய மூன்றையும் சார்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை MCX தங்கம் ஏற்கெனவே குறைந்த அளவில் முடிவடைந்தது. எனவே லேசான ஏற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் நீடித்த உயர்வுக்கு சர்வதேச தங்க விலையில் வலுவான ஏற்றமோ அல்லது ரூபாய் பலவீனமோ தேவைப்படும்.

இந்திய முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதும் நிலையில், ஈரான் போரில் உலகளாவிய பொருளாதார பிரச்சனை, பணவீக்க பிர்சசனை காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பத்திர முதலீடுகள் அதிகரித்து, டாலர் மதிப்பு உயர்ந்து தங்கம் விலைக்கு ஆபத்தாக மாறியது. அமெரிக்கா முதல் இந்தியா வரையில் பணவீக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் மத்திய வங்கிகள் வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகும். இது தங்கம் விலையை கூடுதலாக குறைக்கும் வாய்ப்பை உருவாக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+