தங்கம் விலை இன்னும் கூட வேகமாக சரியும்.. மேஜிக் நம்பர் 4000 தான்.. "இது" மட்டும் நடந்தால் போதுமாம்!
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து விலை எகிறி வந்த நிலையில், சற்றே நிம்மதி தரும் வகையில் தங்கம் விலை இப்போது குறைகிறது. இதற்கிடையே தங்கம் விலையில் இப்போது மேஜிக் நம்பராக 4000 இருப்பது பற்றியும்.. அதை பிரேக் செய்தால் விலை எந்தளவுக்குச் சரியும் என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்!
தங்கம் என்றில்லை... எந்தவொரு பொருளின் விலையும் ஏறினால்.. நிச்சயம் அது கொஞ்சமாவது குறையவே செய்யும். அதற்குத் தங்கம் மட்டும் விதிவிலக்கு இல்லை! எப்போது விலை குறைய ஆரம்பிக்கும்.. எவ்வளவு குறையும் என்பது மட்டுமே கேள்வி.. அதற்கான பதில் நமக்குத் தற்போது கிடைத்துள்ளது போலவே தெரிகிறது. தங்கம் விலை மீண்டும் மெல்லக் குறைய ஆரம்பித்துள்ளது.

சர்வதேச மார்கெட்
சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்தாலே இந்தியாவில் அதன் டிரெண்ட் நமக்கு ஓரளவுக்குப் புரிந்துவிடும். சர்வதேச மார்கெட்டை பொறுத்தவரை கடந்த இரு மாதங்களில் தங்கம் விலை 35% வரை உயர்ந்துள்ளது. கடந்த அக்டோபர் 20ம் தேதி அதிகபட்சமாக ஒரு அவுன்ஸ் 4370 டாலர் வரை போனது. இந்தியாவிலும் அதுவே தான் எதிரொலித்தது.
இந்தச் சூழலில் தான் அதற்கு மறுநாள் அதாவது அக்டோபர் 21 முதல் தங்கம் விலை தடாலடியாகச் சரிந்து வருகிறது. அக்டோபர் 21ம் தேதி ஒரே நாளில் 5%க்கு மேல் சரிந்தது. இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் தங்கம் விலை பெருவாரியாகக் குறைந்திருந்தது. இந்தத் தங்கம் விலையின் சாட்களை பார்க்கும்போது technical ரீதியாக நமக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புலப்படும்.
மேஜிக் நம்பர் 4000
Technical என்பது தங்கம் உட்பட எந்தவொரு விஷயத்தின் சாட்களை வைத்து, அது உயருமோ குறையுமா உள்ளிட்ட டிரெண்டை சொல்வதாகும். தங்கத்தைப் பொறுத்தவரை அதற்கு 4000 டாலர் என்பது கிட்டத்தட்ட இப்போது மேஜிக் நம்பர் போல இருக்கிறது. இந்த 4000 டாலர் தங்கத்திற்கு வலிமையான ஒரு சப்போர்ட்டாக இருக்கிறது.
சப்போர்ட் என்றால் இதற்குக் கீழ் தங்கம் விலை போக முடியாமல் கஷ்டப்படுகிறது. தங்கம் விலை 4000 டாலருக்கு கீழ் போனால் முதலீட்டாளர்கள் உள்ளே புகுந்து தங்கத்தை வாங்கி விலையை ஏற்றிவிடுகிறார்கள். இதனால் 4000 டாலருக்கு கீழ் தங்கத்தால் போக முடியவில்லை.
சப்போர்ட்டை உடைக்குமா தங்கம்?
சர்வதேச மார்கெட்டில் இரு நாட்களில் மட்டும் 3 முறை இந்த சப்போர்ட்டை உடைக்க முயற்சிகள் நடந்துள்ளது. முதலில் அக். 21ம் தேதி இரவு தங்கம் விலை 4011 டாலர் வரை சென்று, மீண்டும் உயர்ந்துள்ளது. அடுத்து நேற்று காலை மீண்டும் அது 4027 டாலர் வரை சென்று மீண்டும் ஏறிவிட்டது. தொடர்ந்து நேற்று பகலில் மீண்டும் ஒரு முறை 4020 டாலர் வரை சென்றது. இப்படி மூன்று முறை சென்ற போதிலும் தங்கத்தால் அந்த 4000 சப்போர்ட்டை உடைக்க முடியவில்லை. இப்போது (பிற்பகல் 3.30) ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 4123 டாலராக இருக்கிறது.
எவ்வளவு குறையலாம்!
தங்கம் விலை ஒருவேளை 4000 மார்க்கை தாண்டி கீழே போனால்.. அது 3,945 டாலர் வரை சரியலாம் என வல்லுநர்கள் சொல்கிறார்கள். அங்கு அடுத்த சப்போர்ட் வரும். அதையும் உடைத்தால் 3845 வரை போகும் என டெக்னிக்கல் அனாலிசிஸ் வல்லுநர்கள் சொல்கிறார்கள். இது தற்போதைய விலையில் இருந்து சுமார் 6% சரிவாகும்.
அதாவது 4000 என்ற மேஜிக் நம்பரை பிரேக் செய்தால் தங்கம் விலை இப்போதைய விலையில் இருந்து 4 முதல் 6% வரை குறையும் என்றே டெக்னிக்கல் அனாலிசிஸ் வல்லுநர்கள் சொல்கிறார்கள். அதேநேரம் டெக்னிக்கல் அனாலிசிஸ் என்பது முழுக்க முழுக்க சார்ட் அடிப்படையிலானது. புவிசார் அரசியல் மாற்றங்கள் தங்கம் விலையை நேரடியாகவே பாதிக்கும் என்பதால் இதை அப்படியே நடக்கும் என நாம் எடுத்துக் கொள்ள முடியாது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications