தங்க மார்க்கெட்டில் சூறாவளி நிச்சயம்.. இன்றிரவு அமெரிக்கா எடுக்க போகும் முடிவு.. சரிய வாய்ப்பு?
சென்னை: அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் கடந்த இரு நாட்களாக நடந்த நிலையில் இன்று வரி விகிதம் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறது. வரி விகிதம் குறித்த முடிவோடு அமெரிக்க மத்திய வங்கி என்ன கருத்துகளைச் சொல்கிறது என்பது உலகமே எதிர்நோக்கும் விஷயமாக மாறியிருக்கிறது. தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பது இதை வைத்தே முடிவாகும்.
தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்று இந்தியாவில் விலை சற்றே குறைந்தாலும் கூட இன்னுமே கூட பலரும் எட்டி கூட பிடிக்க முடியாத நிலையிலேயே தங்கம் இருக்கிறது. இதற்கிடையே அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் கடந்த இரு நாட்களாக நடக்கும் நிலையில், இன்று வட்டி விகிதம் குறித்த முடிவுகளை எடுக்கிறது.

அமெரிக்க மத்திய வங்கி
இந்த வட்டி விகித முடிவுகள் தான் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பதை நேரடியாக முடிவு செய்யும். அமெரிக்க மத்திய வங்கி நிலைப்பாட்டின் மூன்று சாத்தியமான சூழல்களும், அதற்கேற்பத் தங்கத்தின் விலை எப்படி மாறும் என்பதையும் பார்ப்போம்.
பாசிட்டிவ் & நடுநிலை
இந்த முறை வட்டி விகிதம் குறைக்கப்படாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால், வட்டி குறைப்பு இல்லை என்பதோடு பெட் வங்கி என்ன சொல்கிறது என்பது முக்கியம். நிலைமை பரவாயில்லை... 2026க்குள் வட்டி விகிதம் இருக்கும் என்பது போல அமெரிக்க மத்திய வங்கி சொன்னால் ஏற்கனவே பலவீனமாக இருக்கும் டாலர் மேலும் பலவீனமடையும். கடன் பத்திரங்களின் மதிப்பு குறையும். தங்கம் விலை அதிகரிக்கவே செய்யும். ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் தங்கம் இன்னும் உயரும்போது அது மக்களுக்குச் சிரமத்தையே தரும்.
அடுத்தது நடுநிலையான நிலைப்பாடு. வட்டி விகிதங்களை மாற்றப்போவதில்லை என அறிவிப்போடு, வட்டி குறைப்பு எப்போது என்பது குறித்த தகவல் எதையும் பவுல் பகிராமல் நடுநிலை வகித்தால் தங்கம் விலை இதே வரம்பில் இருக்கும். பெரியளவில் ஏறவும் செய்யாது. இறங்கவும் செய்யாது. அடுத்த சில நாட்களுக்கு இதே நிலை தொடரும்.
தங்கம் சரியும்
அதேநேரம் வட்டி குறைப்பு இல்லை என்பதோடு சேர்ந்து சில காட்டமான கருத்துகளைக் கூறினால் நிலைமை மொத்தமாக மாறிவிடும். வட்டி குறைப்புக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பது போன்ற கருத்தோடு பணவீக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்தால் அதை ஆங்கிலத்தில் hawkish நிலைப்பாடு எனச் சொல்வார்கள். தங்கம் விலை குறைய இதுபோன்ற சூழலே தேவை
இப்படி ஹாக்கிஷ் நிலைப்பாடு எடுக்கும்போது டாலர் மதிப்பு உயரும். இதனால் அமெரிக்கப் பத்திரங்களின் மதிப்பும் உயரும். மறுபுறம் தங்கம் விலையும் கூட கணிசமாகக் குறையும். இந்தச் சூழலில் பவுல் என்ன மாதிரியான கருத்துகளைச் சொல்கிறார் என்பது முக்கியம். மிகவும் எச்சரிக்கும் தொனியில் அவருடைய வார்த்தைகள் இருந்தால் தங்கம் விலை பெரியளவில் சரியும். இல்லையென்றால் ஓரளவுக்குச் சரியும். இந்த நிலைப்பாடு எடுக்கும் போது ஒரு கிராம் தங்கம் விலை ரூ.300 முதல் ரூ.400 வரை சரிய வாய்ப்பு இருக்கிறது.
நாளைக்கு சூறாவளியே அடிக்கும்
இருப்பினும், இதையும் கூட நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. பவுல் எச்சரித்தவுடன் டிரம்ப் வெளியே வந்து திடீரென எதாவது வரி பற்றியோ அல்லது அமெரிக்க மத்திய வங்கிக்கு எதிராகவோ காட்டமான கருத்துகளைக் கூறினால் தங்கம் விலை பெரியளவில் குறையாது.
எது எப்படியாக இருந்தாலும் இன்றிரவு அமெரிக்க எடுக்கப் போகும் முடிவு ரொம்பவே முக்கியம். எதிர்காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதை இதுதான் தீர்மானிக்கப் போகிறது. அமெரிக்க நேரப்படி மதியம் 2 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி நள்ளிரவில் இந்த தகவல்கள் வெளியாகும். அதை பொறுத்தே தங்கம் விலையும் மாறும். எந்த முடிவாக இருந்தாலும் நாளை இந்திய மார்கெட்டில் தங்கம் விலை சுழன்றடிக்க வாய்ப்புகள் அதிகம்!
-
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
இங்கிட்டு ஹரி நாடார் மாதிரி..அங்கிட்டு அவரு! கழுத்து வலிக்க வலிக்க தங்கநகைகள்! ஒரே நாளில் உடைத்த ஐடி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக்












Click it and Unblock the Notifications