60 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறையுமா? அக்டோபர் 24ல் தெரியும்!

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: அக்டோபர் 24ல் நடக்க இருக்கும் ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் 60 பொருட்களுக்கான வரியினை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது.

இதில் 500க்கும் அதிகமான பொருட்களுக்கு முறையே 5 சதவிகிதம் முதல் அதிக பட்சமாக 28 சதவிகிதம் வரையிலும் சேவைப் பணிகளுக்கு 18 சதவிகிதமும் வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டது.

ஆயினும், பெரும்பாலான பொருட்களுக்கான வரி விகிதம் மிக அதிகமாக உள்ளது என்று பெரும்பாலான வர்த்தகர்களும் தொழில் துறையினரும் தங்களின் அதிருப்தியை ஜிஎஸ்டி குழுவிற்கு தெரிவித்து வந்தனர்.

ஜிஎஸ்டி குழுவும் இவர்களின் கோரிக்கையை ஏற்று அவ்வப்போது நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப வரி விகிதத்தை மாற்றியும் அமைத்து வருகின்றனர்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

கடந்த சனிக்கிழமை வானளாவிய அதிகாரம் மிக்க ஜிஎஸ்டி கவுன்சிலின் 21வது கூட்டமானது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் தலைமையில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன,

புளி, பருப்பு

புளி, பருப்பு

இக்கூட்டத்தில் தொழில் துறையினர் மற்றும் வர்த்தகர்களின் கோரிக்கையை ஏற்று சுமார் 100 பொருட்களுக்கான வரியினை மாற்றி அமைப்பது தொடர்பாக விரிவாக பரிசீலனை செய்யப்பட்டது. இதில் அகர்பத்தி, புளி, பருப்பு வகைகள், ரப்பர், ரெய்ன் கோட் உள்ளிட்ட சுமார் 40 பொருட்களுக்கான வரி விகிதங்களை குறைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது

வரி குறைப்பு

வரி குறைப்பு

அவற்றில் 28 சதவிகிதமாக உள்ளவற்றை 18 சதவிகிமாகவும், 18 சதவிகிமாக உள்ளவற்றை 12 சதவிகிமாகவும், 12 சதவிகிமாக உள்ள பொருட்களுக்குக்கான வரியினை 5 சதவிகிமாகவும் குறைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

60 பொருட்களின் வரி குறையும்

60 பொருட்களின் வரி குறையும்

60 பொருட்களுக்கான வரி விகிதங்களை குறைப்பது தொடர்பாக வரும் அக்டோபர் மாதம் 24ஆம் தேதி நடைபெற உள்ள 22வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில்

ஜிஎஸ்டி கவுன்சில்

இதுபற்றி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, மத்திய அரசானது, சில பொருட்களுக்கான வரி விகிமானது அதிகமாக உள்ளதால் அவற்றின் வரி விகிதங்களை குறைக்க முடிவு செய்தது.

எனவே அவற்றின் வரி விகிதங்களை குறைப்பது என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும், என்று தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The government is mulling rate revision for items that fall in the highest tax bracket of 28 percent. “A decision towards this is yet to be taken as it would require Council's approval,” the official said.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற