• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் ஏன் புதிய சிறப்பம்சங்களை கொண்ட ரெனால்ட் க்விட்டை வாங்க கூடாது

By Veera Kumar

சென்னை: சும்மா அட்டகாசமாக அசத்த வந்துள்ளது ரெனால்ட் க்விட் கார். இது உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு என்றே கூறலாம். இனி உங்க சிறிய காருக்கு எல்லாம் டாட்டா காட்டிட்டு இந்த பெரிய ரெனால்ட் க்விட்டை ஓட்டிச் செல்லுங்கள். இந்த காரின் சிறப்பம்சமே ஓட்டுவதற்கு எளிதாக உள்ளது. சென்னை போன்ற மிகப்பெரிய மெட்ரோபொலிட்டியன் நகரில் கூட புகுந்து விளையாடக் கூடிய இலகுவான இயந்திர அமைப்புகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

டிராபிக், கார் பார்க்கிங் போன்ற இடங்களில் கூட நீங்கள் இனி கஷ்டப்பட வேண்டாம். நல்ல செளகரியமான அமைப்பை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கேட்ச்பேக்கும் நிறைய பொருட்களை கொண்டு செல்ல ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் குடும்ப சுற்றுலாவிற்கு இது ஏதுவான கார் என்றே கூறலாம். ஆமாங்க இந்த ஒட்டுமொத்த அம்சமும் கொண்ட ரெனால்ட் க்விட் விரைவிலேயே உங்களை சந்திக்க உள்ளது.

கண்டிப்பாக இது மற்ற கார்களை காட்டிலும் எல்லாரையும் ஈர்க்கும் சிறப்பம்சங்ளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதுப் புது அம்சங்களுடன் உங்கள் கண்ணுக்கு மட்டுமல்ல உங்கள் பயணத்திற்கும் விருந்தளிக்க போகும் இது, இந்த பண்டிகை காலங்களுக்கு ஏற்றது. எனவே இனி தாமதிக்காமல் உங்கள் பண்டிகையை ரெனால்ட் க்விட் குடும்பத்துடன் கொண்டாடுங்கள்.

இந்த காரின் புதிய அம்சமாக ஈர்க்கப்படும் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள SUV அமைப்புகள், கூர்மையான முன்புற க்ரில் அமைப்புகள், c - வடிவ பகல் நேர LED ஒளிரும் விளக்குகள் போன்றவற்றை கொண்டு அட்டகாசமாக தயாராகியுள்ளது. இதைத் தவிர நீங்கள் பார்க் செய்வதற்கு ஏதுவாக பார்க்கிங் கேமராவும் உள்ளது. இதனால் நீங்கள் எந்த வித சிரமமும் இல்லாமல் எளிதாக எந்த இடத்திலும் உங்கள் காரை பார்க் செய்ய இயலும். இதைத் தவிர எலக்ட்ரானிக் சிறப்பம்சமாக 12 வால்ட் சாக்கெட், பிடிப்பதற்கு ஏதுவாக புதிய வடிவில் கியர் கைப்பிடி, இதில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளும் ரெம்ப ரீலாக்ஸாக பயணம் செய்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது. முதுகு வலி, கழுத்து வலி போன்றவை ஏற்படாமல் இருக்க மென்மையான சீட்டு அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 Here’s why you should consider the New Feature-loaded Renault Kwid as your next buy”

நீங்கள் ஒரு வாரம் சுற்றுலா சென்றால் கூட அதற்கான லக்கேஜ்களை எடுத்துச் செல்லும் அளவிற்கு இதில் நிறைய இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் சாய்ந்து கொண்டு காலை நீட்டி செளகரியமாக பயணம் செய்வதற்கு ஏதுவாக 300 L காலடி அளவிற்கு வசதியிடங்கள் உள்ளது. எனவே நீண்ட நேரம் அமர்ந்து இருந்தாலும் கால் வலி ஏற்படாது. 5 பேர்கள் வரை தாராளமாக உங்கள் வார விடுமுறையை இந்த ரெனால்ட் க்விட் உடன் கொண்டாடலாம்.

முன்புற இருக்கையை நீங்கள் நான்கு வழிகளில் சரி செய்து பயன்படுத்தலாம். நேராக, சாய்ந்து இப்படி உங்கள்செளகரியத்திற்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்யலாம். நல்ல அகலமான கனமான ஸ்டீயரிங் வீல் உங்களுக்கு பிடிப்பதற்கு ஏதுவாக இருப்பதோடு உங்கள் பயணத்தை சுமூகமாக கொண்டு செல்கிறது. நிலத்திலிருந்து உங்கள் காரின் உயரம் 180 மில்லி மீட்டர் அளவில் அமைந்து இருப்பதால் மழைக்காலங்களில், பள்ளங்களில், மேடுகளில் ஓட்டிச் செல்லவும் ஏதுவாக இருக்கும். காரின் அடிப்பகுதி பாதிக்கப்படுமே என்ற அச்சம் இனி வேண்டாம்.

இதன் எஞ்சினில் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும் இதில் பயணத்தை பாதுகாப்பாக வைக்கும் பின்புற ELR (அவசர சீட் பெல்ட் தானியங்கி) சிஸ்டம் உள்ளது. இந்த சிஸ்டம் உங்களின் உடம்பின் நிலைக்கு ஏற்றவாறு அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும். இதனால் பயணத்தின் போது விபத்துகள் தடுக்கப்படுகிறது. மேலும் இது தானாகவே பூட்டிக் கொள்ளுவதும் உண்டு. எனவே நீங்கள் அடிக்கடி மாட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் டக்கென்று காரை நிறுத்தினால் கூட எந்த விபத்தும் நேராமல் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள டிராபிக் அட்ஜெஸ்ட்மெண்ட் சிஸ்டம் சாலை நெரிசலில் மெதுவாக நகர்ந்து செல்வதற்கும், மேடுகளில் ஏறும் போது வண்டி பின்னால் நகர்வதை தடுக்கவும் உதவி செய்கிறது.

இதைத் தவிர இதில் 7 அங்குல அளவிற்கு தொடுதல் திரை கொண்ட வழிகாட்டும் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. வழிகாட்டும் கருவி, சீட் பெல்ட் அணிந்ததை காண்பிக்கும் சென்சார், வேகத்தை காட்டும் ரேடியோ அமைப்புகள், எடை வரம்புகள், ஒலி கட்டுப்பாடு இப்படி ஏகப்பட்ட ஸ்பெஷிலிட்டிகளை கொண்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள டிஜிட்டல் செக்மண்ட் ஒரு பயண கம்ப்யூட்டர் மாதிரி செயல்படுகிறது. இதன் தனித்துவமான கியர் மாற்றும் தன்மை உங்களுக்கு அதிக எரிபொருள் செயல்திறனை அடைய உதவுகிறது.

இந்த புதிய அல்ட்ரா மாடல் ரெனால்ட் க்விட் தற்போது பியாரி ரெட் நிறம், மூன் லைட் சில்வர் கலர், பிளானட் க்ரே, அவுட்பேக் தாமிர நிறம், ஜஸ் கூல் வொயிட், எலக்ட்ரிக் நீல நிறம் என்று கண்ணை பறிக்கும் விதங்களில் வலம் வருகிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த நிறங்களை தேர்ந்தெடுத்து ஓட்டி மகிழலாம். நிறைய நிறங்களில் இருப்பதால் அவர்களுக்கு தேர்வு செய்யவும் எளிதாக இருக்கும்.

அப்புறம் ஏன் வெயிட் பண்ணுரிங்க? இந்த புதிய க்விட் உங்களுக்காக அனைத்து கலை அம்சங்களையும் கொண்டு உங்களுடன் பயணிக்க தயாராக இருக்கிறது. 4 வருடம் /1 லட்சம் கி. மீ என்ற உத்தரவாதத்துடன் உங்களுக்கு ஒரு ஆச்சர்யத்தை யும் சேர்த்தே கொண்டு வரப் போகிறது.

காரில் மட்டும் எங்கள் சிறப்பம்சம் நிற்கவில்லை, நாங்கள் காரை விற்பதில் கூட உங்களுக்கான ஆச்சர்ய பார்வையை அள்ளி வழங்கப் போகிறோம். ஆமாங்க உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக எங்கள் ரெனால்ட் ஸ்ஷோ ரூமில் பாலிவுட் செலிபிரிட்டியான உங்கள் மனதிற்கு பிடித்த ரன்பீர் கபூரே விற்பனையாளராக மாறினார். அவரே வாடிக்கையாளருக்கும் விளக்கமளித்து சந்தோஷப்படுத்தினார்.

கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி வாடிக்கையாளருக்கு ஒரு பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். அப்புறம் என்னங்க புதிய கார், ரன்பீர் கபூர் என்று ஒரே செல்ஃபி தான். சீக்கிரம் விரையுங்கள், உங்கள் பயணம் புதியதாக தொடங்க ரெனால்ட் க்விட் காத்து இருக்கிறது. உடனே ரெனால்ட் ஸ்ஷோ ரூம் செல்லுங்கள் உங்கள் புதிய காருடன் உலா வாருங்கள்.

 
 
 
English summary
Here’s why you should consider the New Feature-loaded Renault Kwid as your next buy”, find the reasons in the article.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more