Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லுலு மால் குழும ஐபிஓ பங்குகள்! வாங்குவது எப்படி? என்ன ஆவணங்கள் தேவை? அமீரக மக்களே நோட் ப்ளீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லுலு குழுமம் தனது பங்குகளை அபுதாபி பங்குச்சந்தையில் பட்டியலிட உள்ள செய்தி, முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, அரபு நாடுகளில் வாழும் தமிழர்கள் மற்றும் மலையாளிகளின் மத்தியில் லுலு குழும பங்குகளை வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய ஹைப்பர் மார்க்கெட் சங்கிலித் தொடர் என்றால் அது லுலு ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடையதுதான். கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் எம்.ஏ.யூசுப் அலிக்கு சொந்தமானதுதான் லுலு ரீடெய்ல் ஹோல்டிங்ஸ். இந்த நிறுவனம் அடுத்த வாரம் $1.8 பில்லியன் மதிப்புக்கு அபுதாபி பங்குச் சந்தையில் ஐபிஓ வெளியிடுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) இவ்வாறு வெளியிடப்படும் மிகப்பெரிய மதிப்பிலான ஐபிஓ இதுதான். அபுதாபி பங்குச் சந்தை வரலாற்றில் ஒரு தனியார் நிறுவனத்தால் வெளியிடப்பட உள்ள மிகப்பெரிய ஐபிஓ என்ற பெருமையும் லுலுவுக்கு கிடைத்துள்ளது.

lulu mall kerala business

அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கி நவம்பர் 5ஆம் தேதி முடிவடையும் ஐபிஓ மூலம் 2.58 பில்லியனுக்கும் அதிகமான பங்குகளை இந்த நிறுவனம் வழங்க உள்ளது. அபுதாபி செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்சில் நவம்பரில் இதற்கான வர்த்தகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லுலு குழுமம் தனது மொத்த பங்குகளில் 25 சதவீதத்தை அபுதாபி பங்குச்சந்தையில் விற்பனை செய்ய உள்ளது. இதில் 89 சதவீதம் பங்குகள் நிறுவன முதலீட்டாளர்களுக்கும், 10 சதவீதம் சிறிய முதலீட்டாளர்களுக்கும், 1 சதவீதம் தனது ஊழியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. லுலு குழுமத்தின் IPO-யில் பங்கேற்க விரும்பும் முதலீட்டாளர்கள் சில தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

அபுதாபி பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமக்கள் மற்றும் அங்கு பணிபுரியும் வெளிநாட்டவர்கள் மட்டுமே IPO-யில் பங்கேற்க முடியும். அபுதாபி பங்குச்சந்தையில் முதலீடு செய்ய, முதலீட்டாளர்கள் ஒரு தேசிய முதலீட்டாளர் எண் (NIN) பெற்றிருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள டீமேட் கணக்கு போல, UAE-யில் முதலீடு செய்ய NIN அவசியம். மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு வங்கிக் கணக்காவது உங்கள் பெயரில் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

NIN என்பது ஒரு அடையாள எண்ணாகும். இதன் மூலம் முதலீட்டாளர்கள் IPO-யில் பங்கேற்கலாம், பங்குகளை வாங்கலாம், விற்கலாம், பங்கு விலையை அறிந்து கொள்ளலாம் மற்றும் தங்கள் முதலீட்டின் நிலையை கண்காணிக்கலாம். NIN பெறுவது மிகவும் எளிது. அபுதாபி பங்குச்சந்தையின் வாடிக்கையாளர் சேவை மையங்கள், அங்கீகரிக்கப்பட்ட தரகர் நிறுவனங்கள் அல்லது பங்குச் சந்தையின் செல்போன் ஆப் மூலம் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து NIN-ஐ பெறலாம்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமக்கள், NIN பெற, அசல் எமிரேட்ஸ் அடையாள அட்டை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாஸ்போர்ட் போதுமானது. வெளிநாட்டவர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட்டுடன் கூடுதலாக, தங்கள் பெயரில் உள்ள வங்கிக் கணக்கு விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து கட்டணத்தை செலுத்திய பிறகு, ஒரு அல்லது இரண்டு நாட்களில் NIN கிடைக்கும். NIN கிடைத்தவுடன், முதலீட்டாளர்கள் லுலு குழுமம் உட்பட பங்குச்சந்தையில் விரும்பிய நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம். லுலு குழுமத்தின் IPO இந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 12 ஆம் தேதி நிறைவடையும். இந்த IPO மூலம் லுலு குழுமம் 180 கோடி டாலர்களை திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+