மே 15க்கு பிறகு இந்தியாவுக்கு பெரும் ஆபத்து.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை
ஈரான் - அமெரிக்கா இடையேயான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரத்துக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. பொருளாதார வல்லுநரான ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது வீடியோவில் இந்தியாவில் ஏற்படப்போகும் முக்கியமான பிரச்சனை குறித்து விளக்கியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கும் நடவடிக்கையை உறுதி செய்துள்ளதால், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பெரிதும் பாதிக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சூழல் இந்தியப் பொருளாதாரத்தை எப்படி பாதிக்கும்?

டிரம்ப் ஈரானுக்கு எதிராக "நீ கலாட்டா செய்தால் நானும் செய்வேன்" என்று வகையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க கடற்படை மூலம் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக முடக்கும் திட்டம் உறுதியாகிவிட்டது. இதனால் உலக அளவிலான எண்ணெய் விநியோகப் பாதை தடைபட்டுள்ளது. இந்தியாவுக்கு இது உடனடி தீர்வு அளிக்காது என ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் முழுவதும் இந்த பிரச்சனை தொடரும். நடப்பு நிதியாண்டில் 12 மாதங்களில் 2 மாதங்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 10 மாதங்களில் மட்டுமே ஜிடிபி வளர்ச்சிக்கு வாய்ப்பு இருக்கும். டிரம்ப் இந்த பிரச்சனையை விரைவில் தீர்த்துவிட்டால் நல்லது. இல்லையென்றால் இந்தியப் பொருளாதாரம் இன்னும் மோசமான நிலைக்கு செல்லும் என ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மே 15க்கு பிறகு - எரிபொருள் ரேஷனிங் வரும் அபாயம்
தற்போதே இந்திய ஹோட்டல்களில் எரிவாயு பற்றாக்குறை காரணமாக மெனுவில் பாதி ஐட்டம் குறைத்து வருகின்றனர். மே 15-க்கு பிறகு இந்த நிலைமை மேலும் மோசமடையும். எரிபொருள் ரேஷனிங் அமலுக்கு வரும் வாய்ப்பு உள்ளது என ஆனந்து ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். இது இந்தியாவுக்கு பெரும் ஆபத்து சிக்னலாகும். ஒரு நாளைக்கு 10 கப்பல்கள் வரும் இடத்தில் தற்போது 2 நாட்களுக்கு 2 கப்பல்கள் மட்டுமே வருகின்றன. இந்த நிலைமை அமெரிக்காவின் பிளாகேட் மூலம் மேலும் அதிகரிக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
ஸ்பாட் மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 140 முதல் 150 டாலர் வரை உள்ளது. ஷெல் நிறுவனத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் விலையே இன்டிகேட்டிவ் பிரைஸ் ஆக அமையும். பெட்ரோல், டீசல் இரண்டும் 130 ரூபாய் அருகில் உள்ளது. தற்போதைய ரீடைல் எரிபொருள் விலை 30 சதவீதம் உயர்ந்தால் ஆட்டோ, பஸ் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து கட்டணமும் உயரும். கச்சா எண்ணெய் விலையை ஃபியூச்சர்ஸ் மார்க்கெட் அடிப்படையில் பார்க்கும் போது 104-106 டாலரில் வர்த்தகமாகிறது, ஆனால் இவை 3 மாத டெலிவரிக்கானது. தற்போதைய ரீயாலிட்டியை செக் செய்ய ஸ்பாட் மார்க்கெட் நிலவரத்தைத்தான் கவனிக்க வேண்டும் என ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங் கால ரிசர்வ்
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது உருவாக்கப்பட்ட எண்ணெய் ரிசர்வ் இப்போது பாதியாகக் குறைந்துவிட்டது. மே 15-க்கு பிறகு இந்த ரிசர்வ் முழுவதும் காலியாகும் நிலை ஏற்படும். இதனால் பெரிய அளவிலான பற்றாக்குறை வரும் வாய்ப்பு உள்ளது என ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். எனவே ஈரான்-அமெரிக்கா இடையேயான இந்தப் போர் எவ்வளவு விரைவில் முடிவுக்கு வருகிறதோ, அவ்வளவு விரைவில் இந்தியாவுக்கு நல்லது. இல்லையெனில் எரிபொருளை ரேஷனிங் அடிப்படையில் விநியோகம் செய்ய வேண்டிய நிலை உருவாகும் என ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் இந்தியப் பொருளாதாரத்துக்கு பெரும் சோதனை காலமாக மாறிவிட்டது. போர் விரைவில் முடிவுக்கு வராவிட்டால், எண்ணெய் விலை உயர்வு, பொருட்கள் பற்றாக்குறை, பொருளாதார வளர்ச்சி மந்தம் ஆகியவை இந்தியாவை மேலும் மோசமான நிலைக்கு தள்ளும்.












Click it and Unblock the Notifications