ஜன் தன் கணக்குகளில் குவியும் பணம்... ரூ.67,330 கோடி டெபாசிட்

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 3 மாதங்களில் மட்டும் ஜன் தன் கணக்குகளில் ரூ.2,554 கோடி வரையில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜன் தன் கணக்குகளில் உள்ள மொத்த டெபாசிட் தொகை ரூ.67,330 கோடியாக உயர்ந்துள்ளது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, மத்திய அரசால் வழங்கப்படும் அனைத்துச் சலுகைகளும் அவர்களுக்கு நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2014ஆம் ஆண்டின் சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி 'பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா' திட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்தார்.

இத்திட்டம் துவங்கப்பட்ட அன்றே 1.5 கோடி வங்கிக் கணக்குகள் உருவாக்கப்பட்டன. எனினும், அதைத் தொடர்ந்து இத்திட்டம் சரியாகச் செயல்படவில்லை.

ஜன் தன் கணக்கு டெபாசிட்

ஜன் தன் கணக்கு டெபாசிட்

தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள் பல செயல்படாமலேயே இருந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது இந்த ஜன் தன் வங்கிக் கணக்குகளில் அதிகம் பேர் டெபாசிட் செய்யத் தொடங்கினர். அதைத் தொடர்ந்த மாதங்களிலும் ஜன் தன் கணக்குகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

ஜன் தன் வங்கிக் கணக்கு

ஜன் தன் வங்கிக் கணக்கு

ஜன் தன் யோஜனா திட்டம் அமலாக்கப்படுவதற்கு முன் இந்தியாவில் 42 சதவீதம் குடும்பங்கள் வங்கி கணக்குகள் துவங்கபடமால் இருந்தது. இந்த திட்டத்தின் மூலம் பல குடும்பங்களுக்கு குறைந்த தொகை இல்லாமல் வங்கி கணக்கு துவங்க மத்திய அரசு உதவியது. தற்போது 99.9 சதவீதம் குடும்பங்களில் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு வங்கி கணக்காவது துவங்கப்பட்டுள்ளது என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

ஜன்தன் வங்கிக் கணக்கு

ஜன்தன் வங்கிக் கணக்கு

கடந்த ஜூலை - செப்டம்பர் மாதங்களில் மட்டும் ஜன் தன் கணக்குகளில் ரூ.2,554 கோடி வரையில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய மூன்று மாதங்களில் (மே - ஜூலை) ரூ.400 கோடி மட்டுமே டெபாசிட் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ..67,330 கோடி டெபாசிட்

ரூ..67,330 கோடி டெபாசிட்

ஜூலை - செப்டம்பர் மாதங்களில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.2,554 கோடியில், ஜூலை மாதத்தில் ரூ.1,108 கோடியும், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.722 கோடியும் மற்றும் செப்டம்பர் மாதத்தில் ரூ.724 கோடியும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜன் தன் கணக்குகளில் உள்ள மொத்த டெபாசிட் தொகை ரூ.67,330 கோடியாக உயர்ந்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
There has been a spurt in cash flows into Prime Minister Jan Dhan Yojana (PMJDY) bank accounts in the past three months.The total balance in these accounts now stands at ₹67,330 crore.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற