கோவை, தூத்துக்குடி, சென்னை, காரைக்குடியில் பிரம்மாண்டம்.. இது வெறும் ஆரம்பம் தான்.. டிஆர்பி ராஜா
சென்னை: விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் உற்பத்தி மற்றும் முதலீட்டில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உயர முயற்சித்து வருகிறது. இதற்காக விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை பூங்காக்கள் கோயம்புத்தூர், ஓசூர், வடகல் மற்றும் கோவிலம்பாக்கத்தில் அமைக்கப்படுகிறது. இதுபற்றிய செய்தியை பகிர்ந்த தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, தமிழ்நாட்டின் தொழில்துறைச் சூழல், விண்வெளி மற்றும் பாதுகாப்பு (Aerospace & Defence) உற்பத்தித் துறையில் இந்தியாவின் அடுத்த பெரிய பாய்ச்சலுக்கு உந்துசக்தியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் உற்பத்தி மற்றும் முதலீட்டில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உயர முயற்சித்து வருகிறது. இதற்காக பாதுகாப்புத் தொழில் வழித்தடத் திட்டம் மாநிலம் முழுவதும்செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை பூங்காக்கள் கோவை, ஓசூர், வடகல் மற்றும் சென்னை கோவிலாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் சோதனை மையங்கள் சென்னை மற்றும் திருச்சி போன்ற இடங்களில் அமைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் வலுவான உற்பத்தித் தளம், திறமையான பணியாளர்கள் மற்றும் விண்வெளி/பாதுகாப்புத் துறையில் அனுபவம் வாய்ந்த பொதுத்துறை/தனியார் நிறுவனங்கள் (டாடா, எல்&டி, முருகப்பா குரூப் போன்றவை) உள்ளன. இதுதவிர சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையின் விநியோகச் சங்கிலியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன (700 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்).
அதேபோல் தொழில்நுட்ப பரிமாற்றம், முதலீட்டு ஊக்குவிப்பு, பொது-தனியார் கூட்டாண்மை போன்றவற்றை மேம்படுத்தும் கொள்கைகளைஅரசு வகுத்து வருகிறது.
அத்துடன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மூலம் பல்வேறு திட்டங்கள் அரசு சார்பில் செயல்படுத்தப்படுகின்றன.இதன் மூலம் பாதுகாப்புத் துறை வழித்தடத்தில் ரூ. 75,000 கோடி முதலீட்டை ஈர்ப்பது இலக்காக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இது உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என்று அரசு நம்புகிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் தமிழ்நாடு, மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் மாநில அரசின் ஆதரவு மூலம் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் ஒரு பெரிய உற்பத்தி மையமாகவும், முதலீடுகளை ஈர்க்கும் இடமாகவும் மாறத் தயாராகி வருகிறது.
இதுபற்றிய செய்தி ஒன்று ஆங்கில ஊடகத்தில் வெளியாகி இருந்தது. அதனை பகிர்ந்திருந்த தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, "தமிழ்நாடு பறக்கத் தயாராகிவிட்டது! டாங்குகள் முதல் செயற்கைக்கோள்கள் வரை... " என்ற கேப்சனுடன் சில முக்கியமான தகவல்களை பதிவிட்டுள்ளார். அதனை அப்படியே அவருடைய வார்த்தைகளில் பார்ப்போம்.
தமிழ்நாட்டின் தொழில்துறைச் சூழல், விண்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் துறையில் இந்தியாவின் அடுத்த பெரிய பாய்ச்சலுக்கு உந்துசக்தியாக இருகக்கிறது. சமமற்ற துல்லியம், திறன் மற்றும் கொள்கை நிலைத்தன்மையுடன், தமிழ்நாடு இந்தியாவின் பாதுகாப்பு கட்டளை மையமாக மாறி வருகிறது. (அதாவது தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாதுகாப்பு மற்றும் விண்வெளி உபகரணங்கள், உதிரி பாகங்கள் ஆகியவை மிக உயர்ந்த தரம் மற்றும் துல்லியத்துடன் தயாரிக்கப்படுகிறது. தமிழக தொழிலாளர்கள், MSME-கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் உலகத் தரத்திற்கு இணையாக, பிழைகள் இல்லாமல் பொருட்களை உற்பத்தி செய்வதில் சிறந்து விளங்குகிறார்கள். தமிழ்நாட்டில் பாதுகாப்பு துறையில் வேலை செய்யத் தேவையான திறமை வாய்ந்த, அனுபவம் மிக்க மற்றும் பயிற்சி பெற்ற மனித சக்தி இருக்கிறது.
பொறியியல் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பாரம்பரிய உற்பத்தித் திறன்கள் ஆகியவை இணைந்து, பாதுகாப்பு துறையின் வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவை வழங்குகின்றன. தமிழக அரசு விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைக்குச் சாதகமான, நீண்ட காலத்திற்கு மாறாத உறுதியான கொள்கைகளை வகுத்துள்ளது.. இந்தக் கொள்கைகள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளிக்கின்றன. வரிச் சலுகைகள், நிலம் ஒதுக்கீடு, ஒற்றைச் சாளர அனுமதி போன்ற அரசு ஆதரவுகள் இருப்பதால், இங்கு முதலீடு செய்வது எளிதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது).
இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பிரத்யேக விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை பூங்காக்கள் வடிவம் பெற்று வருகிறது.
கோயம்புத்தூர் - விண்வெளி மற்றும் பாதுகாப்புப் பூங்கா
தூத்துக்குடி - விண்வெளி மற்றும் உந்துசக்திப் பூங்கா (Space & Propellant Park)
காரைக்குடி & கோவில்பட்டி - விமானப் பயிற்சி மையங்கள் (Flight Training Centres)
சென்னை & திருச்சி - பாதுகாப்புச் சோதனை மையங்கள் (Defence Testing Hubs)
தமிழ்நாட்டிலுள்ள 700-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்க ஏற்கனவே உலகளாவிய விண்வெளி விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதியாக உள்ளன; இவை முக்கிய ஒரிஜில் பாகங்கள் உற்பத்தியாளர்களுக்கும் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் உதிரிபாகங்களை வழங்குகின்றன.
அசோக் லேலண்ட், MRF மற்றும் சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் போன்ற ஜாம்பவான்களின் ஆதரவுடன், நமது சிறுகுறு நிறுவனங்கள் தற்சார்பு இந்தியாவுக்கு ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகின்றன.டிஆர்டிஓO (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு), IN-SPACe மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுவதால், ஆளில்லா விமானங்கள் (UAVs), மின்னணுவியல் மற்றும் உந்துசக்தி அமைப்புகளுக்கான இந்தியாவின் மையமாக தமிழ்நாடு உருவாகி வருகிறது. இதுவே தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் #திராவிடமாடல் தொலைநோக்குப் பார்வையின் செயல் வடிவம்! உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, கொள்கை ஒத்திசைவு மற்றும் திறமையான பணியாளர்களை ஒன்றிணைத்து, தமிழ்நாட்டை பாதுகாப்பு உற்பத்திக்கு மிகவும் விரும்பப்படும் இடமாக மாற்றுகிறது. வானமே எல்லை அல்ல, இது வெறும் ஆரம்பம்." இவ்வாறு கூறியுள்ளார். அண்மையில் ஐடி, தொழில்நுட்பம், சாலைகள், கடன்கள் என தமிழ்நாடு குறித்த நெகட்டிவான பதிவு ஒன்று வைரலாகி வந்த நிலையில், அதற்கு பதில்அளிக்கும் வகையில், டிஆர்பி ராஜாவின் பதில் இருப்பதாக கூறப்படுகிறது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications