புற்று நோயா…? கவலை வேண்டாம் வந்து விட்டது நவீன சிகிச்சை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புற்றுநோய் என்பது நெருப்பைப் போல, நெருப்பு ஒரு கட்டிடத்தில் ஆரம்பித்து எரியும் பொழுதே கண்ணுக்கு தெரியாத நெருப்புப் பொறிகள் காற்றில் எல்லா திசைகளிலும் பரவும். நாம் கண்ணுக்குத் தெரிந்த நெருப்பு ஜூவாலை மீது மட்டும் தண்ணீர் ஊற்றி அணைப்போம். ஆனால் பல திசைகளுக்கும் சென்று தங்கிய பொறிகளில் இருந்து மீண்டும் நெருப்பு பற்றி கட்டிடம் முழமைக்கும் பரவி முழு கட்டிடத்தையும் அழித்து விடும். ஆகவே நெருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதியில் இருக்கும்போதே கட்டிடத்தின் எல்லா பகுதிகளிலும் தண்ணீர் ஊற்றினால் நெருப்பு பரவாமல் முழு கட்டிடத்தையும் காப்பாற்றி விடலாம்.

அதுபோலத்தான் புற்றுநோயும், உடலில் ஏதேனும் ஒரு பாகத்தில் ஆரம்பித்தாலும் பெரும்பாலானோருக்கு அதன் கோடிக்கணக்கான விதைகள் ரத்தம் மூலம் உடலின் முக்கிய பாகங்களான மூளை, இதயம், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றில் சென்று தங்கி வளரும். முதலில் ஆரம்பித்த பாகத்திற்கு மட்டும் ரேடியோதெரபியோ அல்லது அறுவை சிகிச்சையோ அல்லது இரண்டும் சேர்த்து செய்தாலோ முழு குணம் உண்டாவது இல்லை. பெரும்பாலானோருக்கு அறுவை அல்லது ரேடியோதெரபி செய்து சில மாதங்களிலேயே அத்தியாவசிய பாகங்களுக்கு பரவி உயிரைப் பறித்து விடுகிறது.

Modern treatment awaits for Cancer patients at KKR hospital

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலான புற்றுநோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே அறுவை சிகிச்சை அல்லது ரேடியோதெரபி மட்டுமே செய்யப்பட்டது. இன்றும் பெரும்பாலான மருத்துவமனைகளில் இவையே செய்யப்படுகின்றன. ஆனால், சமீப வருடங்களில் பெரும்பாலான புற்றுநோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

இவற்றை சரியான கலவையில் நரம்புவழியாக ரத்தத்தில் செலுத்தினால் C.T.SCAN, MRI SCAN, PET SCAN ஆகியவற்றிற்கும் தெரியாத உடல் எங்கும் பரவி உயிர் பறிக்க காத்திருக்கும் புற்றுநோய் விதைகள் அழிவதுடன், முதலில் ஆரம்பித்த பெரிய கட்டியும் மேலும் வளராமல் சுருங்கி சக்கை ஆகிவிடும். இதற்கு மேலும் தேவைப்பட்டால் சிறிய அளவு அறுவை சிகிச்சையோ அல்லது ரேடியோ தெரபியோ செய்து வைத்தியத்தை பூர்த்தி செய்யலாம்.

இத்தகைய நவீன மருந்து சிகிச்சையிலும், மார்பக புற்றுநோய், மூச்சுக்குழாய் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், நாக்கு புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய், குழந்தைகள் புற்றுநோய் ஆகியவற்றை ஆபரேஷன் செய்து அகற்றாமல் வைத்தியம் செய்யலாம். இதுதவிர ஏற்கனவே அறுவை சிகிச்சை அல்லது ரேடியோதெரபி செய்தும் முற்றி உடலில் பல பாகங்களுக்கும் பரவி உயிர் குடிக்கக் காத்திருக்கும் பலருக்கு, நவீன மருந்துகள் அளித்து வாழ்நாள் மற்றும் வாழ்வின் தரம் (Quantity and quality of life) குறையாமல் காப்பாற்றலாம், ரேடியோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை செய்தும் குணமடையாத புற்றுநோயையும் இம்முறையில் குணப்படுத்தலாம்.

Modern treatment awaits for Cancer patients at KKR hospital

AIDS நோயில் பிழைத்தவரில் பலருக்கு சில ஆண்டுகளில் புற்றுநோயும் வருகிறது. புற்று நோயாளிகள் சிலருக்கு AIDS இருக்கிறது. சமீபத்தில் வந்திருக்கும் நவீன சிகிச்சை முறைகளில் AIDS + புற்றுநோய் இரண்டும் உள்ள நோயாளிகளுக்கும் நல்ல வைத்தியம் செய்ய முடியும் என்கிறார் சென்னை மருத்துவ மருந்தியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர். இவர் 30 ஆண்டுகளாக இத்துறையில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 15 ஆண்டுகளாக அனைத்து வகை புற்றுநோய்க்கும் சிகிச்சை அளிப்பதற்கென்றே மந்தைவெளி மார்க்கெட் அருகில் K.K.R.மருத்துவமனையை நிறுவி சிகிச்சை அளித்து வருகிறார்.

முகவரி:

எண்.26/49, வெங்கடகிருஷ்ணா ரோடு,
மந்தைவெளி பேருந்து நிலையம் அருகில், மந்தைவெளி, சென்னை-28.
அலைபேசி எண்:8883000123.

English summary
KKR hospital is located in Mandaveli in Chennai and it caters the Modern treatment for the Cancer patients.