பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி உயர்ந்தாலும் விலை உயராது: ஐ.ஓ.சி விளக்கம்
டெல்லி: சாதாரண பெட்ரோல் மீதான உற்பத்தி வரி 1 ரூபாய் 20 பைசாவில் இருந்து 2 ரூபாய் 70 பைசாவாக உயர்ந்துள்ளது. சாதாரண டீசல் மீதான உற்பத்தி வரி 1 ரூபாய் 46 பைசாவில் இருந்து 2 ரூபாய் 96 பைசாவாக உயர்ந்துள்ளது.
வரி உயர்ந்தாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட மாட்டாது என இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இதையடுத்து உள்நாட்டு பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் ஆகியவை பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை லிட்டருக்கு ரூ.1 வரை குறைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

உற்பத்தி வரி உயர்வு
கச்சா எண்ணெய் விலை இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு 1 ரூபாய் 50 பைசா அதிகரித்துள்ளது.
பிராண்டட் அல்லாத சாதாரண பெட்ரோல் மீதான வரி, லிட்டருக்கு 1 ரூபாய் 20 பைசாவில் இருந்து 2 ரூபாய் 70 பைசாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிராண்டட் பெட்ரோல் மீதான வரி, லிட்டருக்கு 2 ரூபாய் 35 பைசாவில் இருந்து 3 ரூபாய் 85 பைசாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சாதாரண டீசல் மீதான வரி ரூ.1 ரூபாய் 46 பைசாவில் இருந்து 2 ரூபாய் 96 பைசாவாகவும், பிராண்டட் டீசல் மீதான விலை 3 ரூபாய் 75 பைசாவில் இருந்து 5 ரூபாய் 25 பைசாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி வரி உயர்வினால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.13,000 கோடி வருவாய் கூடுதலாக கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஐ.ஓ.சி. விளக்கம்
உற்பத்தி வரி உயர்த்தப்பட்டதை அடுத்து பெட்ரோல், டீசல் விலை உயரும் என அஞ்சப்பட்டது. ஆனால் ஒருபோது விலை உயர்வு இருக்காது என இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி உயர்த்தபட்டாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராது என்று கூறியுள்ள ஐ.ஓ.சி. தலைவர் பி.அசோக், உற்பத்தி வரிச்சுமையை நுகர்வோர் மீது சுமத்தப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் விலை குறையும்
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 6 முறை பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. கடந்த 1-ஆம் தேதி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 58 பைசா குறைந்து, ஒரு லிட்டர் ரூ 67.01 க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 43 பைசா குறைந்து லிட்டர் 56 ரூபாய் 84 பைசாவாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் பெட்ரோல் விலை மேலும் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications