2005 க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற காலக்கெடு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு…
டெல்லி: 2005 ஆம் ஆண்டுக்கு முந்தைய பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்வதற்கான காலக்கெடு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 500, 1,000 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் அதிகம் புழங்குகின்றன.
இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தான் போன்ற சில அண்டை நாடுகளும் இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வருகின்றன.

2005-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா அச்சிட்டு வரும் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு தன்மை கொண்டவை. இதனால் 2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட இதே மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை நாட்டின் பாதுகாப்பு கருதி இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற முடிவு செய்தது.
அதன்படி 2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கியில் கொடுத்து அவற்றை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அல்லது தங்களுடைய வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்திக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இதற்கான கால அவகாசம் கடந்த ஜனவரி 1-ந்தேதி என்று முன்பு ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. பின்னர் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று இதற்கான அவகாசத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டித்தது.
அந்த காலக்கெடு வரும் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்வதற்கான காலக்கெடு மேலும் 6 மாதங்களுக்கு, அதாவது டிசம்வர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications