அலர்ட்..! சென்செக்ஸ், நிஃப்டி பெரும் சரிவு.. வந்தது முக்கிய சிக்னல்!
இந்திய பங்குச்சந்தை திங்கள்கிழமை சரிவுடன் தொடங்கும். அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது மட்டும் அல்லாமல் டிரம்ப் அமெரிக்க கடற்படை கொண்டு மொத்த ஹார்முஸ் வழித்தடத்தையும் முடக்குவோம் என்று அறிவித்த காரணத்தால் தற்போது முதலீட்டு சந்தையில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.
இதற்கு ஏற்றார் போல் உலக சந்தைகளில் திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் பெரும் சரிவை பதிவு செய்ய துவங்கியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வும், ஹார்முஸ் நீரிணை தொடர்பான அச்சமும் முதலீட்டாளர்களை பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. இதனால் உலக அளவில் பங்கு சந்தைகள் வீழ்ச்சியடைந்த நிலையில், இந்திய சந்தையும் அதன் தாக்கத்தை உணர துவங்கியுள்ளது.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவு
வெள்ளிக்கிழமை ஈரான் - அமெரிக்க போர் முடிவுக்கு வரும் என நம்பிக்கையில் இந்திய சந்தை மிக வலுவான நிலையில் முடிவடைந்தது. சென்செக்ஸ் 1.20 சதவீதம் உயர்வுடன் 918.60 புள்ளிகள் உயர்ந்து 77,550.25 என்ற அளவில் முடிந்தது. நிஃப்டி 50 குறியீடு 275.50 புள்ளிகள் உயர்ந்து 24,050.60 என்ற நிலையில் முடிவடைந்தது. ஆனால் வார இறுதியில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் திங்கள்கிழமை வர்த்தகம் திறக்கும்போதே பெறும் சரிவுடன் துவங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆசிய சந்தைகள் மற்றும் உலகளாவிய எதிரொலி
ஆசிய சந்தைகள் திங்கள்கிழமை வர்த்தகம் திறக்கும்போது பலவீனமாக வர்த்தகமாகின. ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு 0.84 சதவீதம் சரிந்தது. டாபிக்ஸ் 0.42 சதவீதம் குறைந்தது. தென் கொரியாவின் கோஸ்பி 1.83 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. கோஸ்டாக் 1.43 சதவீதம் சரிந்தது. ஹாங்காங் ஹாங் செங் ஃபியூச்சர்ஸ் குறைவான திறப்பை சுட்டிக்காட்டின.
அமெரிக்க ஸ்டாக் ஃபியூச்சர்ஸும் வீழ்ச்சியடைந்தன. டவ் ஜோன்ஸ் ஃபியூச்சர்ஸ் 517 புள்ளிகள் அதாவது 1.1 சதவீதம் சரிந்தன. எஸ்&பி 500 மற்றும் நாஸ்டாக் 100 ஃபியூச்சர்ஸும் 1.1 முதல் 1.2 சதவீதம் வரை குறைந்தன.
கிஃப்ட் நிஃப்டி சமிக்ஞை
ஆசிய சந்தையும், அமெரிக்க பியூச்சர்ஸ் சந்தையிலும் ஏற்பட்ட சரிவின் எதிரொலியாக இன்று காலை மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கும் முன்பே, இன்றைய வர்த்தகம் எப்படியிருக்கும் என்பதை காட்டும் கிஃப்ட் நிஃப்டி 23,740 என்ற அளவில் வர்த்தகமாகியது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 24,020 புள்ளிகளில் முடிந்த கிஃப்டி நிஃப்டி இன்று காலை வர்த்தகத்திலேயே 1.2 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
இது இந்திய சந்தை திங்கள்கிழமை குறைவான வர்த்தக துவக்கத்துடன் திறக்கும் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இந்த சிக்னலை சரியாக கவனித்து, தங்களுடைய முதலீட்டை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
திங்கள்கிழமை சந்தை திறப்பு எப்படி இருக்கும் என்பது முழுக்க முழுக்க உலக சந்தைகளின் போக்கு மற்றும் புவி அரசியல் செய்திகளைப் பொறுத்தது அமைகிறது. இந்திய பொருளாதாரமும், நுகர்வும் சிறப்பாக இருக்கும் வேளையில், சர்வதேச சந்தையின் தாக்கும் இதை பாதித்து வருகிறது. இதனால் பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால் பங்குச்சந்தையில் கூடுதல் பாதிப்பு உருவாகியுள்ளது. இருப்பினும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எந்த புதிய ராணுவ நடவடிக்கையும் இல்லாததால், சந்தை சிறிய இறக்கத்துடன் வர்த்தகமாகலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications