ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு சலுகை வெளியாகும் – நிர்மலா சீதாராமன்
ஆன்லைன் மூலம் தொழில் துவங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக பல சிறப்பு சலுகைகளை வரும் பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
டெல்லி: ஸ்டார்ட் அப் இந்தியா என்னும் மத்திய அரசின் புதிய திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார்.
மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறையானது, தொழில் தொடங்குவதற்கான பரிந்துரைகள் பட்டியலை மத்திய நிதி அமைச்சகத்திற்கு சமர்பித்திருந்தது. அது தொடர்பான சில கருத்துக்களை நிர்மலா சீதாராமன் பகிர்ந்து கொண்டார்.

அதில், ஸ்டார்ட்அப் நிறுவனங்களிடம் இருந்து சில பரிந்துரைகளை தெரிவித்துள்ளனர். அதனை நாங்கள் அந்த பரிந்துரைகளை எல்லாம் மத்திய நிதி அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தற்போது ஆன்லைன் மூலம் தொழில் துவங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இந்நிறுவனங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவற்றை ஊக்குவிப்பதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு வரிச்சலுகை உள்பட ஏராளமான கூடுதலாக சில சலுகைகளையும் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் இது தொடர்பான நல்ல செய்தி பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
இந்தியாவில் ஆன்லைனில் தொழில் துவங்குவதற்கான ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் கடந்த 2016ஆம் துவங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததால், இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் மத்திய நிதி அமைச்சகம் சில அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துவங்குபவர்களுக்கு சில பிரச்சனைகள் இருப்பதையும், அதை அவர்களே தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications