சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் லாபம் ரூ.351.32 கோடி

ஜூலை - செப்டம்பர் காலாண்டில் சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் லாபம் 23.41 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவி நெட்வொர்க்கின் நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் ரூ.351.31 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2017ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் கிடைத்த ரூ.284.67 கோடி லாபத்தை விட 23.41 சதவிகிதம் கூடுதலாகும்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மிகப்பெரிய ஊடக நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் குழுமம் தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ஏராளமான தொலைக்காட்சி சேனல்களை இயக்கி வருகிறது. எஃப்.எம். ரேடியோ, தினசரி, வார இதழ்களும் சன் நெட்வொர்க் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகின்றன.

Sun TV Network Q2 net up 23.41% to Rs 351.32 cr

இந்நிறுவனம் சென்ற ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மொத்தம் ரூ.811.67 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் வருவாய் ரூ.713.13 கோடியாக மட்டுமே இருந்தது.

சன் டிவி நெட்வொர்க்கின் நிகர லாபம் இக்காலாண்டில் ரூ.351.31 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2017ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் கிடைத்த ரூ.284.67 கோடி லாபத்தை விட 23.41 சதவிகிதம் கூடுதலாகும். சந்தா வாயிலாகக் கிடைத்த வருவாயைப் பொறுத்தவரையில் சென்ற ஆண்டில் ரூ.280.05 கோடியிலிருந்து இந்த ஆண்டில் ரூ.339.79 கோடியாக உயர்ந்துள்ளது. சன் டிவி நெட்வொர்க்கானது ஆசியாவின் மிகப் பெரிய டிவி நெட்வொர்க் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+