For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இளைஞர்களை கொல்லும் இ சிகரெட்டுகள்... தமிழக அரசு தடை

மக்களின் உடல்நலன் கருதி எலக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தமிழக சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: எலக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ-சிகரெட்டுகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட உள்ளது. மக்களின் உடல்நலன் கருதி தமிழகத்தில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்குத் தடை விதிப்பதாக அரசு அறிவித்துள்ளது.

பீடி, சிகரெட்க்குகளுக்கு மாற்றாக எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்தன. மால்களிலும், ஆன்லைன் மூலமாகவும் இந்த சிகரெட்டுகளை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த சிகரெட்டில் நிக்கோடினின் அளவு அதிகளவில் இருப்பதாக பல புகார்கள் எழுந்தன.

Tamil Nadu to ban e-cigarette says Health minister

வேப்பரைஸ்டு சிகரெட் எனப்படும் இந்த இ,சிகரெட் ரீபிள் பேனா போல நீண்ட வடிவத்தில் காணப்படும். புகையிலை, சிகரெட்டுக்கு மாற்றாக இ சிகரெட் சென்னையில் ஐ.டி ஊழியர்களிடையே புழக்கத்தில் உள்ளது. ஒரு சிகரெட் விலை 5ஆயிரம் ரூபாய்.

ஆன்லைனின் புக் செய்தால் டோர் டெலிவரி செய்யப்படுகிறது. இ சிகரெட்டில் போதை வரவழைக்கும் நறுமணத்தை கலந்து புகைத்து உச்சகட்ட போதையில் திளைக்கின்றனர். எவ்வித பரிசோதனையிலும் இந்த போதை கண்டறியப்படுவதில்லை என்பதால் இளைஞர்களிடையே இது அதிவேகமாக பரவி வருகிறது.

இந்த சிகரெட்டை வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவுக்குள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன. சென்னையை பொறுத்தவரை 21 இடங்களில் இந்த ஏஜென்சிகள் உள்ளன. இவற்றில் இ,சிகரெட்டை வழக்கமாக பெட்டிக்கடைகளில் வாங்குவது போல வாங்க முடியாது. ஆன்லைன் முறையில் பதிவு செய்தால் டோர் டெலிவரி செய்யப்படும். இந்த சிகரெட் தரத்துக்கு ஏற்ப ஒரு சிகரெட் ரூ.5000 வரை விற்கப்படுகிறது.

கேட்ரிஜ்ஜில் கலக்கப்படும் 'ஜிகால்' என்ற ஒரு வகை பிளேவரில் ஆல்கஹாலில் உள்ளது போல 2 மடங்கு போதை உள்ளது. இந்த பிளேவரை இளைஞர்கள் பலர் தற்போது துணிச்சலாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த போதையில் இருப்பவர்களை எவ்வித மருத்துவ பரிசோதனையிலும் கண்டறிய இயலாது என்பதால் பணியாற்றும் இடங்களுக்கும் பலர் போதையில் செல்கின்றனர்

இந்நிலையில், இந்த எலக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ-சிகரெட்டுகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட உள்ளது. மக்களின் உடல்நலன் கருதி தமிழகத்தில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்குத் தடை விதிப்பதாக தமிழக சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று அறிவித்துள்ளார்.

இ. சிகரெட்டில் கார்சினோஜெனிக் என்ற மூலக்கூறு முக்கிய இடத்தை வகிக்கிறது. ஆக்ரோலின், அசிட்டால்டிலைடு போன்ற மூலக்கூறுகள் இதில் கலக்கின்றன. இவை உடல் நலத்துக்கு கேடானவை. நிகோடின் பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டாலும் தற்போது கிடைக்கும் சிகரெட்டில் 2 மடங்கு நிகோடின் பிளேவர் உள்ளது.

இந்த சிகரெட்டால் நன்மையை விட தீமை அதிகம் என்ற நிலையில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இ, சிகரெட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இ, சிகரெட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Electronic-Cigarette, a battery-operated inhaler that emits doses of vaporised nicotine, or non-nicotine solutions, will be banned in Tamil Nadu, Health minister C Vijaya Baskar told the Assembly on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X