TCS நிதா கான் 8 வார கர்ப்பம்.. இவரின் உண்மையான வேலை என்ன தெரியுமா? அப்போ HR பதவி?
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நாசிக் பிபிஓ அலுவலகத்தில் எழுந்த பாலியன் புகார்கள் பெரிய பூகம்பமாக வெடித்துள்ளது. ஒரு இளம் பெண் ஊழியர் தொடுத்த புகாரால் தொடங்கிய இந்த விவகாரம், 9 FIR பதிவாகி தற்போத இந்திய மக்கள் கவனிக்கும் முக்கியமான பிரச்சனையாக மாறியுள்ளது.
இந்நிலையில், டிசிஎஸ் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கிய நபராக இருந்த நிதா கான் இந்த வழக்கில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சட்டரீதியான நடவடிக்கை எடுத்துள்ளார். இதில் முக்கியமான சில விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நிதா கான் ஜாமீன் மனு
நிதா கான் என்பவர் TCS நாசிக் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரில் ஒருவர். இவர் நீதிமன்றத்தில் முன்கூட்டிய ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கான மனுவில் அவர் சொன்ன காரணம் தான் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. நிதா கான் இவர் தற்போது எட்டு வார கர்ப்பிணியாக இருப்பாத தெரிவித்துள்ளார். இந்த மனு தொடர்பாக நீதிமன்றம் விரைவில் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதா கானின் குடும்பம்
நிதா கான் 26 வயதான இளம் பெண். நாசிக்கில் பிறந்து வளர்ந்த இவர் வணிகவியல் பட்டம் பெற்றுள்ளார். தற்போது தொலைதூரக் கல்வி மூலம் எம்பிஏ படித்து வருகிறார். இவரது குடும்பம் மும்பையில் மரவிறகு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு திருமணம் ஆன இவர், ஜனவரி மாதம் மும்பைக்கு தனது கணவருடன் குடிபெயர்ந்தார். நான்கு மாதங்களுக்கு முன்பு மும்பைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்ட இவர், மலாட் பகுதியில் உள்ள பிபிஓ அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். ஏப்ரல் 9 அன்று இவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
நிதா கான் பணி
நிதா கானின் பணி பொறுப்பு குறித்து குடும்பத்தினர் மற்றும் நிறுவனம் இடையே வேறுபாடு நிலவுகிறது. குடும்பத்தினர் இவர் தொலைபேசி அழைப்பு ஊழியராக (Telecaller) மட்டுமே பணியாற்றியதாகவும், மனிதவளத் துறையுடன் தொடர்பில்லை எனவும் கூறுகின்றனர். ஆனால் நிறுவன ஆவணங்களில் இவரது பதவி 'ப்ராசஸ் அசோசியேட்' என பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வேறுபாடு வழக்கின் போக்கில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
குடும்பத்தினரின் மறுக்கும் குற்றச்சாட்டு
நிதா கானின் குடும்பத்தினர் அவர் மீது வைக்கப்பட்டு உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளனர். அவரது தந்தை, "அவர் தினமும் வேலைக்குச் சென்று வந்தவர். எந்தத் தவறும் செய்யவில்லை" எனக் கூறியுள்ளார். மேலும், இவர் தற்போது எட்டு வார கர்ப்பிணியாக உள்ளதால், நீதிமன்றம் இதை கருத்தில் கொண்டு முடிவெடுக்கும் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
வழக்கின் தற்போதைய நிலை
இந்த வழக்கில் மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவர் ஷாபி ஷேக், சிறையில் சக கைதிகளால் தோழர்களால் தாக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவரது வழக்கறிஞர் இதை சிறிய சம்பவம் எனக் குறிப்பிட்டாலும், வழக்கைச் சுற்றியுள்ள பதற்றத்தை அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது. தற்போது போலீஸ் சேகரித்த ஆதாரங்கள், நிதா கானின் ஈடுபாட்டின் அளவு மற்றும் இரு தரப்பு வாதங்களை வைத்து நீதிமன்றம் முன்கூட்டிய ஜாமீன் கோரிக்கைக்கு முடிவு எடுக்கும்.
வழக்கின் விவரம்
இந்த விவகாரம் நாசிக் TCS அலுவலகத்தில் 23 வயதான ஒரு இளம் பெண் ஊழியர் தொடுத்த புகாரால் தொடங்கியது. அவர் தனது சக ஊழியர் தானிஷ் ஷேக் மீது புகார் அளித்தார். திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து உறவு வைத்துக் கொண்ட பின்னர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவர் கூறினார். மேலும், தானிஷ் மற்றும் மற்றொரு சக ஊழியர் தௌசிப் அட்டார் ஆகியோர் தனது மதம் மாற்ற செய்ய முயன்றதாகவும் புகார் அளித்தார்.
இந்தப் புகாரில் தௌசிப் மற்றும் நிதா கான் ஆகியோர் ஒரு இந்து தெய்வம் குறித்து தவறான கருத்துகளைத் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மத உணர்வுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
இந்த வழக்கு விரிவடைந்ததைத் தொடர்ந்து மொத்தம் ஒன்பது FIRகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும் நிதா கான் ஒரே ஒரு FIR-இல் மட்டுமே பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். அது மார்ச் 26 அன்று தேவலாலி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மத உணர்வுகள் தொடர்பான புகார் ஆகும். மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications