ஆரோக்கிய வாழ்விற்கான அத்தியாவசிய உணவு பொருட்கள்.. ஆன்லைனில் விற்கும் Tredyfoods
சென்னை: ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரான Tredyfoods.com மூலம் ஆரோக்கியமான, சத்தான உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
உணவே மருந்து என்ற சொல்லுக்கு ஏற்ப மக்கள் இன்றைக்கு ஆரோக்கிய உணவுப்பழக்கத்திற்கு மாறி வருகின்றனர். ஆர்கானிக் உணவுப்பொருட்களையும், ஹோம்மேட் பொருட்களையும் தேடி தேடி வாங்கி சமைத்து சாப்பிடுகின்றனர். ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரான Tredyfoods.com மில் உடலுக்கு ஆரோக்கியமும், சத்தும் தரும் சிறுதானியங்களில் செய்யப்பட்ட ரெடிமிக்ஸ் உணவுப் பொருட்களும், இயற்கையான தேனும், மூலிகை சூப் பவுடர்களும் விற்பனை செய்யப்படுகிறது.
ஹோம்மேட் உணவுப்பொருட்கள்:
Tredyfoods.com ஹோம்மேட் உணவுப்பொருட்களின் சங்கமம். ஐயர் ஸ்பெஷல் மசாலாக்கள், புளிக்காய்ச்சல், கர்நாடகா ஸ்டைல் மசாலாக்கள் மற்றும் பாரம்பரியமாக சிறந்த முறையில் தயாரிக்கபடும் மட்டன், சிக்கன், சாம்பார், ரசம் மசாலாக்களும் கிடைக்கும். மேலும் கை முறுக்கு, அதிரசம், கோவ நெய் ஜாமூன், டேட்ஸ் கேரட் கேக், மீன் ஊறுகாய், இறால் ஊறுகாய், தொக்கு வகைகள், ஊட்டி சாக்லேட் வகைகள், சத்து உருண்டைகள் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பது ஆச்சரியப்பட வைக்கும் விஷயம்.

சத்தான, ஆரோக்கியமான உணவுப்பொருட்களை விரும்புபவர்களுக்காகவே கம்பு, சாமை, ராகி, தினை என பலவகை சிறுதானியங்களில் தினை தோசை மிக்ஸ், வரகு தோசை மிக்ஸ், கவுனி அரிசி ஸ்வீட் தோசை மிக்ஸ், ராகி கூழ் மிக்ஸ், பனியார மிக்ஸ், கம்பு கிச்சிலி சம்பா கூழ் மிக்ஸ், கருங்குருவை இட்லி ரைஸ் மிக்ஸ், கிச்சடி சம்பா ரைஸ்மிக்ஸ் என பல வகையான உணவுப் பொருட்கள் Tredyfoods.com மில் விற்பனை செய்யப்படுகிறது.
மூலிகை சூப் பவுடர்கள் மற்றும் தேன் வகைகள்:
மழைக்காலத்தில் சளி, காய்ச்சல் என நோய்களும் வரிசையாக வாட்டி எடுக்கும். நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் இயற்கை மூலிகை சூப் பவுடர்களை வீட்டில் ரெடியாக வைத்துக்கொள்வது அவசியம். வல்லாரை சூப், முருங்கை, ஆவாரம்பூ, கொள்ளு, பிரண்டை, முடக்கத்தான், பொன்னாங்கன்னி, தூதுவளை, வாழைப்பூ என பலவகையாக இயற்கை மூலிகை சூப் பவுடர்கள் Tredyfoods.com மில் விற்பனை செய்கின்றனர். ஆர்டர் செய்தால் போதும் மூலிகை பவுடர்கள் வீடு தேடி வரும்
சூப் மட்டுமல்ல இயற்கையான தேனும் விற்பனை செய்யப்படுகிறது. மலைத்தேன், கொம்புத்தேன், நாவல் தேன், வேம்பு தேன், முருங்கை தேன், தும்பை, துளசி, பூண்டு தேன் நெல்லிக்காய் தேன், துளசி தேன், லவங்கப்பட்டை தேன் என ஏராளமான தேன் வகைகளை Tredyfoods.com மில் விற்கின்றனர்.

பர்ஹி பேரிட்சம்பழம்:
இதோடு மலைவாழைப்பழம், வெண்ணெய் பழமும், மஞ்சள் நிற பர்ஹி பேரிட்சம்பழமும் விற்பனை செய்யப்படுகிறது. மஞ்சள் நிற பர்ஹி பேரிட்சம்பழம் நார்ச்சத்து நிறைந்தது. இந்த பேரிட்சம்பழத்தை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். இரும்பு சத்து நிறைந்தது. தலைமுடி உதிர்வு பிரச்சினையை தீர்க்க சிறந்த பழம் இது. கர்ப்பிணி பெண்கள் சாப்பிட ஏற்ற பழம் இது. கர்ப்பப் பை பிரச்சினைகளை தீர்க்கும். அமைதியான ஆழ்ந்த தூக்கம் வரும். உடல் அசதியை போக்கும்.இந்த பழத்தில் பொட்டாசியம் சத்து உள்ளது. நரம்பு பிரச்சினைகளை சரி செய்யும். இதில் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளதால் வயிற்றில் உள்ள பிரச்சினைகளையும், குடல் புற்றுநோயையும் கட்டுப்படுத்தும். ஆகவே உடனே Tredyfoods.com மில் ஆர்டர் செய்யுங்கள்.
ஆர்கானிக் மசாலாக்கள்:
இது மட்டுமல்ல ரசாயன உரம் கலக்காத ஆர்கானிக் மசாலாக்களும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆர்கானிக் கருவேப்பிலை இட்லி பொடி, கருவேப்பிலை துவையல், ரசப்பொடி, கொள்ளுதுவையல், நவதானிய சேமியா, நாட்டு சர்க்கரையும் விற்பனையாகிறது. ரசம் மசாலா, குழம்பு சில்லி மசாலாக்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மசாலாக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இது மட்டுமல்லாது எள்ளுப்பொடி, கறிவேப்பிலை பொடி பாகற்காய் பொடி, பருப்பு பொடி, மிளகு சாத பொடி, பொன்னாங்கண்ணி பொடி, பூண்டு சாத பொடி, சீரக சாத பொடி, வல்லாரை பொடி என பல பொடிகளை Tredyfoods.com மில் வாங்கலாம்.

சமையல் பாத்திரங்கள் மற்றும் பலகாரங்கள்:
சமையலறையில் மசாலாக்கள் மட்டும் இருந்தால் போதுமா? பாத்திரங்கள் வேண்டாமா என்று கேட்பவர்களுக்காக ஆரோக்கியம் தரும் பித்தளை, இரும்பு பாத்திரங்களும், மரத்தால் செய்யப்பட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. அதோடு தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெருமை சொல்லும் வகையில் தின்பண்டங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. குருக்கத்தி அதிரசம், குருக்கத்தி இனிப்பு சீடை, குருக்கத்தி ராகி பக்கோடா, திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், சாத்தூர் சேவு, மணப்பாறை முருக்கு, சாத்தூர் மிக்சர் என நாவிற்கு ருசி ஊட்டும் பலகாரங்கள், பாரம்பரியத்தை சொல்லும் பாத்திரங்களும் 1000க்கும் மேற்பட்ட பொருட்களும் Tredyfoods.com மில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமின்றி யுஎஸ்ஏ, கனடா, யுகே, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர் செய்யலாம். ஒருமுறை ஆர்டர் செய்து சமைத்து ருசித்து பாருங்க... அப்புறம் அதன் சுவையைப் பற்றியும் Tredyfoods.com பற்றியும் மற்றவர்களுக்கும் எடுத்து கூறுவீர்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications