தங்கம் விலை ரூ.7000க்கு போகுமா? ரேட் வேற தொடர்ந்து சரியுதே.. ஆனந்த் சீனிவாசன் நறுக்.. நோட் பண்ணுங்க
சென்னை: தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து உயர்ந்து உச்சம் தொட்டு வந்தது. ஒரு கட்டத்தில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை கூட தாண்டியது. ஆனால், கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை மெல்லக் குறைந்தே வருகிறது. தங்கம் விலையின் இந்த திடீர் சரிவு குறித்தும்.. இதற்கான காரணம் குறித்தும் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். அது குறித்து நாம் பார்க்கலாம்.
தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய உச்சத்தைத் தொட்டிருந்தது. அப்போது 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 10 ஆயிரத்தைத் தாண்டியிருந்தது. ஆனால், அதன் பிறகு மெல்லக் குறைந்தே வருகிறது. கடந்த சில நாட்களாகத் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் தொடர்கிறது.

தங்கம் விலை
அதாவது கடந்த ஏப்ரல் 22ம் தேதி தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்குப் புதிய உச்சம் தொட்டது. அன்றைய தினம் 24 கேரட் தங்கம் ரூ.10,135க்கு விற்கப்பட்டது. அப்போது 22 கேரட் தங்கமும் ரூ.9290க்கு விற்பனையானது. வரலாற்றில் தங்கம் விலை இந்தளவுக்கு உச்சம் தொட்டது இதுவே முதல்முறையாகும். இருப்பினும், அதன் பிறகு தங்கம் விலை மெல்லச் சரிந்தே வருகிறது. நேற்றைய தினம் ஏப்ரல் 26ம் தேதி சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.9005க்கு விற்பனையானது. அதாவது ஒரு சவரன் ரூ.72040க்கு விற்பனையாகிறது.
ஆனந்த் சீனிவாசன்
இதற்கிடையே தங்கம் விலை குறைவது குறித்து பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தங்கம் விலை தொடர்ந்து சரிவால் இது வரும் நாட்களிலும் தொடரும் என மக்கள் கருதிய நிலையில், அது குறித்தும் விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலையில் நற்செய்தி மேல் நற்செய்தியாக வந்து கொண்டே இருக்கிறது. கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை சரிந்துள்ளது. யாருக்கெல்லாம் தேவையோ அவர்கள் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம். டிரம்ப் இருக்கும் வரை நாம் பயப்படத் தேவையில்லை. தங்கம் விலை நிச்சயம் ரூ.10 ஆயிரத்தைத் தாண்டும். எனவே, தங்கம் விலை குறையும்போது தேவை என்றால் வாங்கிக் கொள்ளுங்கள்" என்றார்.
ரூ.7000க்கு போகுமா
அதேபோல மற்றொரு வீடியோவில், "தங்கம் விலை கொஞ்சம் குறைந்துள்ளது. உடனே அனைவரும் தங்கம் விலை ரூ.5000க்கு போகுமா.. ரூ.7000க்கு போகுமா எனக் கேட்காதீர்கள். தங்கம் விலை இப்போது குறைய டிரம்ப் தான் காரணம். ஆனால், டிரம்ப் நிச்சயம் சீக்கிரமே மாற்றி பேசுவார். தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்பு இருக்கிறது. நாம் காத்திருக்க வேண்டும்.
டாலர்- ரூபாய் தொடர்பு
மேலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பைச் சரியாமல் இருக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், சீனா யுவான் மதிப்பு 20% சரிந்துள்ளது. சீன யுவான் மதிப்பு சரியும்போது, நமது ரூபாய் மதிப்பு சரியாமல் இருந்தால் சர்வதேச வர்த்தகம் எல்லாம் சீன பக்கம் போய்விடும். ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதால் நமக்கு எந்தவொரு லாபமும் இல்லை. சீனாவுக்கே லாபமாக இருக்கும்.
அதேநேரம் ரூபாய் மதிப்பை ரொம்பவும் பாதுகாக்க முடியாது. ரூபாய் மதிப்பு சீக்கிரமே குறையும். அப்படி குறையும்போது தங்கம் அழுத்தத்தை எதிர்கொள்ளும். ஏனென்றால் சர்வதேச சந்தையில் ரூபாயை வைத்துத் தங்கத்தை வாங்க முடியாது. டாலரை கொடுத்தால் மட்டுமே தங்கத்தை வாங்க முடியும். யாரோ டாலர் கொடுத்துத் தங்கத்தை வாங்கிய பிறகே, அது உங்களுக்குக் கடைகளுக்கு வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்றார்
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க மக்களே! சடக்குனு சரிந்த தங்கம்! இது தான் சரியான டைம்! எப்படி? -
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications