18 மணி நேரம்.. பம்ப் செட்டுக்குள் பலாத்காரம்.. 3 பேரிடம் சிக்கிய 15 வயது சிறுமி.. அலற வைத்த அரியானா

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஒரு பம்ப்செட்டுக்குள் அடைத்து வைத்து 2 நாட்களாக ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர் 3 இளைஞர்கள்.. அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்

நாளுக்கு நாள் பெண்களுக்கெதிரான வன்முறை அதிகமாகி கொண்டே வருகிறது.. பெண் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.

15 year old girl illegally confined for 28 hours raped by 3 youths in Haryana

படித்த மாநிலமாக இருந்தாலும், படிப்பறிவு குறைந்த குக் கிராமங்களாக இருந்தாலும் பெண்கள் மீதான தாக்குதலும், வன்முறையும், பலாத்கார சம்பவமும் பெருகி வந்து கொண்டே இருக்கின்றன.

ஹரியானாவின் குருகிராமில் நுஹ் மாவட்டத்திலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. இங்கு பினாங்வா என்ற கிராமம் உள்ளது.. 15 வயது சிறுமி அங்குள்ள வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தாள்.. நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தபோது, அதே ஊரை சேர்ந்த 3 இளைஞர்கள் அங்கு வந்தனர்.

அவர்கள் பெயர் இஸ்மாயில், இர்ஷாத் மற்றும் சாஹிர் என்பதாகும்.. அந்த பெண்ணுக்கு குடிப்பதற்காக டீ கொடுத்தனர்... சொந்த ஊரை சேர்ந்த தெரிந்த நபர்கள் என்பதால், அந்த பெண்ணும் அதை வாங்கி குடித்துள்ளாள்.. ஆனால், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மயக்கம் வருவது போல இருந்துள்ளது.

வெயிலில் வேலை பார்ப்பதால் அப்படி இருக்கும் என்று நினைத்து, அந்த வயல் வெளியில் இருந்த பம்ப் செட்டில் கொஞ்ச நேரம் உட்காரலாம் என்று வந்துள்ளார்.. ஆனால், அந்த பம்ப் செட்டிலேயே மயங்கி விழுந்துவிட்டார்.. இதையடுத்து, அந்த 3 இளைஞர்களும், பம்ப் செட்டிற்குள் நுழைந்துவிட்டனர்.. அந்த சிறுமியை மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.

கிட்டத்தட்ட 28 மணி நேரத்திற்கு மேல் அடைத்து வைத்து பலாத்காரம் செய்தனர்.. அதாவது, 2 பகல், ஒரு இரவு என்று அந்த பம்ப் செட்டில் அடைத்து வைத்து சீரழித்துள்ளனர்.. ஒருகட்டத்தில் சிறுமி கண்விழித்தபோது, இதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளனர்.. ஆனாலும், அந்த பெண் நேரடியாக ஸ்டேஷனுக்கு வந்து 3 பேர் மீதும் புகார் தந்தார்.. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+