பஞ்சாபை சூறையாடுகிறார்கள்.. ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.. விளாசிய கெஜ்ரிவால்
சண்டிகர் : பஞ்சாபை கொள்ளையடிப்பவர்களிடமிருந்து மீட்கவும், பஞ்சாபில் நேர்மையான ஆட்சி அமைத்து மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநில வாக்காளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டசபை பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் மே மாதம் சட்டசபையின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மொத்தம் 117 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக பிப்ரவரி 14 ஆம் தேதி அங்கு தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் கூறியது.

பஞ்சாப் சட்டசபை தேர்தல்
இந்த நிலையில், குரு ரவீந்தரதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு தேர்தல் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என காங்கிரஸ், பாஜக, சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து தேர்தல் தேதி பிப்ரவரி 20ஆம் தேதிக்கு மாற்றி வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. பஞ்சாபில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக, ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம் மற்றும் அம்ரீந்தர் சிங்கின் லோக் காங்கிரஸ் உள்ளிட்டவை களம் கண்டு பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆம் ஆத்மி கட்சி
டெல்லியை போன்று எப்படியாவது பஞ்சாபிலும் ஆட்சி அமைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி முனைப்பு காட்டி வருகிறது. இதையடுத்து அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பஞ்சாபின் முகாமிட்டு தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது வாக்காளர்கள் கவரும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்ற நிலையில் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி நிறுவனம் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
இன்று மாலையுடன் அங்கு பிரச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாபில் நேர்மையான ஆட்சி அமைக்கவும் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், அவர்கள் கடந்த 70 ஆண்டுகளாக பஞ்சாப்பை கொள்ளையடித்து வருகின்றனர், ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் ஆட்சியமைத்தால் இதுபோன்ற நடைமுறைகளுக்கு என்றென்றும் முற்றுப்புள்ளி வைக்கும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

தீவிர பிரச்சாரம்
"ஒன்றுபடுங்கள் அவர்களின் கொள்ளை மற்றும் ஊழலுக்கு முடிவு கட்டுங்கள் என அறைகூவல் விடுத்த அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வரும், பஞ்சாபில் நேர்மையான ஆட்சி அமைக்கப்படும் வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவது முடிவுக்கு வர உள்ளது எனவும், பஞ்சாபின் பணம் இனி மாநில மக்களுக்காக செலவிடப்படும் என கூறினார். மேலும் இந்த முறை பஞ்சாபை காப்பாற்ற மக்கள் வாக்களிக்க வேண்டுமெனவும் உங்கள் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்காக வாக்களியுங்கள், பஞ்சாபிலிருந்து ஊழல் மற்றும் மாஃபியாக்களை அகற்ற வாக்களியுங்கள் என்று ஜலாலாபாத் மற்றும் அபேஹர் தொகுதிகளில் பிரசாரம் செய் கெஜ்ரிவால் கூறினார்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications