சண்டிகர் மேயர் தேர்தல்: “இந்தியா” கூட்டணியின் 8 ஓட்டுகள் செல்லாது அறிவிப்பால் பாஜக வேட்பாளர் வெற்றி!
சண்டிகர்: சண்டிகர் மேயர் தேர்தலில் "இந்தியா" கூட்டணியின் வேட்பாளர் பெற்ற 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது சர்ச்சையாக வெடித்துள்ளது.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் தலைநகராக இருப்பது சண்டிகர். இது யூனியன் பிரதேசமுமாகும். சண்டிகர் மாநகரத்தின் மேயர், துணை மேயர் தேர்தலை "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்தே எதிர்கொண்டன. பாஜகவும் வேட்பாளரை நிறுத்தியது. இயல்பாகவே "இந்தியா" கூட்டணியே வெல்லும் வாய்ப்பு இருந்தது. ஆனால் சண்டிகர் மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக நீதிமன்ற படிகளேறியது "இந்தியா" கூட்டணி. இதனையடுத்தே இன்று சண்டிகர் மேயர் தேர்தல் நடைபெற்றது.

"இந்தியா" கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப், பாஜக சார்பில் மனோஜ் சோங்கர் போட்டியிட்டனர். மேயர் தேர்தலில் "இந்தியா" கூட்டணிக்கு 20 வாக்குகளும் பாஜகவுக்கு 16 வாக்குகளும் கிடைத்தன. ஆனால் திடீரென "இந்தியா" கூட்டணிக்கு கிடைத்த 20 வாக்குகளில் 8 செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதனால் பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றார் என தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
ஆனால் "இந்தியா" கூட்டணி வேட்பாளர் திட்டமிட்டே தோற்கடிக்கப்பட்டார் என ஆம் ஆத்மி , காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் துணை மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியாது எனவும் இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன. இதனால் சண்டிகரில் பதற்றம் நிலவுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications