Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 மாநில தேர்தல்: அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்.. செய்ய வேண்டியவை- கூடாதவை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

உத்திரபிரதேசம் ஹரியானா பஞ்சாப் உத்தராகண்ட் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்கள் சட்டசபைக்கான தேர்தல் தேதி தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவால் இன்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இன்றைய நாள் முதலே 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போதே தேர்தல் நடத்தை விதிகள் எப்போது அமல்படுத்தப்படும் என்ற தேதியையும் தேர்தல் ஆணையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பது வழக்கம். ஆனால் தற்போது தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நாள் முதலே நடத்தை விதிகள் அமலில் வழக்கமாக மாறியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள்

தேர்தல் நடத்தை விதிகள்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை எந்த இடத்திலும் முறைகேடு நடைபெறக் கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு விதிகளைஅமல்படுத்தியுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து முதன் முதலில் 1956ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்ற போது அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கொண்டுவரப்பட்டது அப்போது தேர்தல் நடத்தை விதிகள் என்று எதுவும் பின்பற்றப்படவில்லை.

கேரளாவில் முதன் முறை

கேரளாவில் முதன் முறை

அதன்பிறகு கேரள மாநிலத்தில் 1960ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது சில விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டு அவைகள் கடைபிடிக்கப்பட்ட அதுதான் முதல் தேர்தல் நடத்தை விதிகளாக கூறப்படுகிறது. அதன்பிறகு படிப்படியாக ஆளுங்கட்சியினர் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க தேர்தல் ஆணையத்தால் பல கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டு, இந்த தேர்தல் நடத்தை விதிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்துவது தேர்தல் அறிக்கை என அனைத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

மத இன உணர்வுகளை தூண்ட கூடாது

மத இன உணர்வுகளை தூண்ட கூடாது

தற்போதைய பொதுவான விதிகளின்படி, எந்த அரசியல் கட்சியும் மத இன உணர்வைத் தூண்டி வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது, அரசியல் கட்சிகளை தாக்கிப் பேசும் போது அவற்றின் கொள்கைகள் திட்டங்கள் பணிகளை மட்டுமே குறிப்பிட வேண்டும் தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை குறித்துப் பேசக் கூடாது என விதி உள்ளது. மேலும் வாக்குகளை சேகரிக்க ஜாதி மற்றும் இன உணர்வுகளை தூண்டும் வகையில் பேசக் கூடாது கோயில்கள் மசூதிகள் தேவாலயங்கள் என குறிப்பிட்ட ஒரு மதத்துடன் தொடர்பு இடங்களில் அரசியல் கட்சியினர் பிரச்சாரக் கூட்டம் நடத்தக் கூடாது என விதி உள்ளது.

பணம் பரிசு பொருட்கள்

பணம் பரிசு பொருட்கள்

அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க கூடாது, வேறு எந்த பரிசு பொருளும் வழங்கக்கூடாது , வாக்குச்சாவடி அமைந்திருக்கும் பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பிரச்சாரம் செய்யக்கூடாது எனவும், தேர்தல் நடைபெறும் நாளுக்கு 48 மணி நேரத்திற்குள் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாகன வசதியை அரசியல் கட்சிகள் ஏற்படுத்தி தர கூடாது எனவும் விதிகள் உள்ளன.

தனிநபர் சுதந்திரம்

தனிநபர் சுதந்திரம்

வாக்களிப்பது ஒரு நபரின் தனிக் கொள்கை முடிவு என்பதால் இது குறித்து கருத்துக்களை எதிர்த்து அல்லது அவர்கள் வீடுகளை முற்றுகையிடுவது, தனிநபர் தாக்கிப் பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது, ஒரு அரசியல் கட்சி அல்லது வேட்பாளரின் தொண்டர்கள் தனி நபரிடம் கட்டடம் சுவர் போன்றவற்றை அவர்கள் அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. கட்சிகள் நடத்தும் கூட்டங்கள் பேரணிகளை மற்ற கட்சிகள் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும், மற்ற கட்சி கூட்டங்களில் பிற அரசியல் கட்சித் தொண்டர்கள் கூச்சலிடுவது கேள்வி எழுப்புவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது, ஒரு கட்சி அமைக்கும் சின்னங்கள், பேனர்கள் , போஸ்டர்களை மற்ற கட்சியினர் அகற்ற கூடாது எனவும் விதிகள் உள்ளது.

இந்த தேர்தலில் புதிய விதி

இந்த தேர்தலில் புதிய விதி

ஏற்கனவே அமலில் உள்ள விதிகளோடு இந்த ஆண்டு கூடுதல் விதிகளையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி பேரணிகள் பிரச்சாரக் கூட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முதன்முறையாக தேர்தலுக்குப் பிறகு வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+