உதயமானது விவசாயிகளின் புதிய கட்சி.. பஞ்சாப் தேர்தல் தான் குறி.. ஆம் ஆத்மியுடன் கூட்டணி? பரபர தகவல்
சண்டிகர்: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடிய 32 அமைப்புகளில் 22 அமைப்புகள் ஒன்றிணைந்து சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர்,
மத்திய அரசு கடந்த ஆண்டு புதிய விவசாய சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், விவசாயிகளின் நலனுக்கு எதிராகவும் உள்ளதாகக் கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் தொடர்ந்து ஒரே ஆண்டாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய மத்திய அரசு, பல மாத போராட்டத்திற்குப் பிறகு விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற்றது மத்திய அரசு!

போராட்டம்
போராட்டம் நடைபெற்ற போது, தேர்தல் நடைபெற்ற மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக விவசாய அமைப்புகள் பிரசாரம் செய்தது. அதேநேரம் விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்று விட்டதால் அதன் பிறகு அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என்றும் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருப்போம் என்றும் விவசாய அமைப்புகள் முதலில் கூறியது.

புதிய கட்சி
இந்தச் சூழ்நிலையில் பஞ்சாப் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், விவசாய அமைப்புகள் ஒன்றாக இணைந்து புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர். விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடிய 32 அமைப்புகளில் 22 அமைப்புகள் ஒன்றிணைந்து புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர். சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கட்சி வரும் பஞ்சாப் தேர்தலில் போட்டியிடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி
முக்கியமான அரசியல் கட்சி ஒன்றுடன் இணைந்து 117 தொகுதிகளிலும் போட்டியிட சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா திட்டமிட்டுள்ளது. பெரும்பாலும் ஆம் ஆத்மி கட்சி உடனேயே சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா கைகோர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தத் தகவலை விவசாய அமைப்புகள் மறுத்துள்ளன. இருப்பினும், வரும் காலத்தில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றே எதிர்ப்பாக்கப்படுகிறது.

என்ன காரணம்
இது தொடர்பாக விவசாய அமைப்பு ஒன்றின் தலைவர் ஹர்மீத் சிங் கூறுகையில், "அந்தப் போராட்டத்தில் வெற்றி வென்றோம். அடுத்த தேர்தலிலும் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த குழு தொடங்கப்பட்டுள்ளது. இது ஒரு மக்கள் இயக்கம். இது கட்சி இல்லை என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். எனவே இதில் வெவ்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்துள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

அதிருப்தி
மேலும், மாநிலம் முழுவதும் அமைப்பை வலுப்படுத்துவதில் தான் பணிகள் நடந்து வருவதாகவும் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுகள் இன்னும் தொடங்கவில்லை என்றும் விவசாய அமைப்புகள் சார்பில் தெரிவிக்கப்பட்டன. அதேநேரம் இந்த புதிய கட்சிக்கு அனைத்து விவசாயச் சங்கங்களும் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதிகாரம் மற்றும் வாக்குகளுக்குப் பின்னால் செல்லாமல், விவசாயிகள் போராட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என சில விவசாயச் சங்கங்கள் தெரிவித்து வருகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications