'நான் இனிமையான தீவிரவாதி' - பஞ்சாப் பிரசாரத்தில் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அரவிந்த் கெஜ்ரிவால்!
சண்டிகர்: பஞ்சாப் தேர்தலில் நாளுக்கு நாள் புதுவித காட்சிகள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், தன்னை ஒரு இனிமையான தீவிரவாதி என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பஞ்சாப் மாநிலத்தில் மெதுவாக காலூன்றி வரும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாபில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு போட்டியாக இருக்கிறது. இந்நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆம் ஆத்மியை தீவிரவாதிகளுடன் தொடர்புபடுத்தி பிரசாரம் செய்து வருகின்றன.

பிரதமர் மோடி
ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபை உடைக்க விரும்புகிறார்கள். அதிகாரத்தைப் பெற பிரிவினைவாதிகளுடன் கைகோர்க்கத் தயாராக உள்ளனர். தேவைப்பட்டால் நாட்டை உடைக்கத் தயாராக உள்ளனர். அவர்களின் கொள்கைகள் பாகிஸ்தானின் கொள்கைகளில் இருந்து வேறுபட்டதல்ல. அதனால்தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் பாகிஸ்தானின் கொள்கையை எதிரொலிக்கிறார்கள் என பிரதமர் மோடி பஞ்சாபில் பிரசாரம் செய்தார்.

ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து பிரசாரம் செய்கையில், காங்கிரஸ் கட்சியினர் ஒரு போதும் தீவிரவாதிகள் வீட்டுக்கு செல்வதில்லை. ஆனால் ஆம் ஆத்மி சின்னத்தை சுட்டிக்காட்டி, அதன் தலைவர் காலிஸ்தான் தலைவர் வீட்டுக்கு செல்வார் என கெஜ்ரிவாலை மறைமுகமாகப் பேசி பிரசாரம் செய்தார். காங்கிரஸ் மற்றும் பாஜக என இரண்டு பெரிய கட்சிகளும் ஆம் ஆத்மி மீது இந்த குற்றச்சாட்டை வைத்து தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன.

குமார் விஸ்வாஸ்
ஆம் ஆத்மி மீது இந்த குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதற்கு காரணம் குமார் விஸ்வாஸ். இவர் ஆம் ஆத்மி நிறுவனர்களில் ஒருவர். பின்னர் அங்கிருந்து விலகி, பாஜக-வில் இணைந்தார். பஞ்சாப் தேர்தல் நடைபெறும் நேரத்தில், அவர் பேசிய வீடியோவை பாஜக தற்போது வெளியிட்டுள்ளது. அதில், ''அரவிந்த் கெஜ்ரிவால் ஒருமுறை என்னிடம், 'ஒருநாள் நான் பஞ்சாப் முதல்வராக வேண்டும் அல்லது காலிஸ்தானின் பிரதமராக வருவேன்' என கூறியிருக்கிறார்.

கெஜ்ரிவால் விளக்கம்
காலிஸ்தான் சர்ச்சை குறித்து டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று விளக்கமளித்துள்ளார். அதில், ''பஞ்சாபில் நாங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக வருகிறோம். இதை பிடிக்காதவர்கள் குழுவாக சேர்ந்து என்னை பயங்கரவாதி என்கிறார்கள். இது காமெடியான ஒன்று. பயங்கரவாதி என்றால் பிரதமர் மோடி ஏன் என்னை கைது செய்யவில்லை.

இனிமையான பயங்கரவாதி
இவர்கள் என்னை பயங்கரவாதி என்கிறார்கள், அப்படி என்றால் நான் தான் இந்த உலகின் இனிமையான பயங்கரவாதியாக இருக்க வேண்டும். பள்ளிகள், மருத்துவமனைகள், மின்சாரம், சாலைகள், தண்ணீர் போன்றவற்றை மக்களுக்கு வழங்கும் பயங்கரவாதியாக இருக்க வேண்டும். ராகுல் காந்தி முதலில் என்னை பயங்கரவாதி என்றார், அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, பிரியங்கா காந்தி என வரிசைகட்டி என்னை பயங்கரவாதி என்று அழைப்பது சிரிப்பாக இருக்கிறது.

பகத்சிங்
பயங்கரவாதிகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று மக்களிடையே அச்சத்தை பரப்புகிறது, மற்றொன்று ஊழல்வாதிகள் மத்தியில் அச்சத்தை பரப்புகிறது. இன்று அனைத்து ஊழல்வாதிகளும் எனக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர். அவர்கள் தூக்கம் தொலைந்துவிட்டது. 100 ஆண்டுகளுக்கு முன்பு பகத் சிங் பயங்கரவாதி என்று அழைக்கப்பட்டார். இப்போது 100 ஆண்டுகளுக்குப் பிறகு பகத்சிங்கைப் பின்பற்றுபவரை பயங்கரவாதி என்று அழைக்கிறார்கள்'' என்று அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் கொடுத்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications