1 மாதமாக ரூமில் வைத்து "டார்ச்சர்".. 11 வயது மகளை.. பெற்ற அப்பாவே வன்புணர்வு செய்த கொடூரம்!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் தந்தையே 11 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மாதமாக தொடர்ந்து இந்த சம்பவம் நடந்த நிலையில் சிறுமியின் ஆசிரியர் அளித்த புகாரில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் கொடுமை என்னவெனில் சிறுமியின் தாய்க்கு தனது மகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானது தெரியவே தெரியாது என்பதுதான்.
உ.பி காவல்துறை அலட்சியம்.. கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமி தற்கொலை

வகுப்பறை
பஞ்சாப் மாநிலம் ஜிராக்பூரின் பால்டனா பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்வி மையத்தில் 40 சிறுவர்கள் பயின்று வருகின்றனர். இதில் பயின்று வந்த 11 வயது சிறுமி சமீப நாட்களாக வகுப்பு நடக்கும் போது அதை கவனிக்காமல் இருந்திருக்கிறார். இது குறித்து ஆசிரியை சிறுமியிடம் கேட்டுள்ளார். ஆனால் சிறுமி ஏதும் விரிவாக கூறவில்லை. நாளடைவில் சிறுமி மிகவும் சோர்வாக இருப்பதையும் ஆசிரியை புரிந்துகொண்டு சிறுமியை தனியாக அழைத்து விசாரித்துள்ளார்.

விசாரணை
அப்போதுதான் தனக்கு நேர்ந்த கொடூரத்தை சிறுமி விளக்கியுள்ளார். அதாவது கடந்த ஒரு மாத காலமாக தனது தந்தை தன்னிடம் முறையற்று நடந்து கொண்டதாகவும், பலமுறை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அழுதுகொண்டே கண்ணீர் மல்க மழலை மொழியில் கூறியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத ஆசிரியை உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிறுமிக்கு நிகழ்த்தப்பட்டிருந்த கொடூரம் உண்மையென தெரிய வந்துள்ளது.

கைது
மேலும், இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய்க்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை. தந்தை குழந்தையிடம் விளையாடும்போது தாய் அதனை சாதாரணமாகவே நினைத்துள்ளார். தனது மகளை தூக்கி கொஞ்சும் போதும் அவருக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. இதனை பயன்படுத்திதான் சிறுமியின் தந்தை இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார். தற்போது காவல்துறையினர் தந்தையை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.

தீர்வு
குழந்தைகள் வழக்கத்திற்கு மாறாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்போது பெற்றோர்கள், ஆசிரியர்கள் அவர்களிடம் அது குறித்து கேட்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் கூறி வருகின்றனர். அதேபோல பெண்களை போகப் பொருளாகவும், இரண்டாம் தர மனிதனாகவும் சித்தரிக்கும் விளம்பரங்கள், சினிமாக்கள், இலக்கியங்களை புறக்கணிப்பதன் மூலம்தான் இவ்வாறான கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.