புகையிலைக்காக கொல்லப்பட்ட இளைஞர்? சிசிடிவியை பார்த்தால் புது ட்விஸ்ட்.. கொலை வழக்கில் திருப்பம்
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் மூன்று நிஹாங் சீக்கியர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை செய்யப்பட்ட நபர் போதையில் இருந்ததாகவும், அதேபோல அவர் புகையிலை மென்றுகொண்டிருந்ததாலும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது கொலையில் புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட நபர், சிறிது நேரத்திற்கு முன்னர் ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்பெண் அங்கிருந்து விலக முற்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

படுகொலை
அமிர்தசரஸில் கோல்டன் அமிர்தசரஸ் அருகே உள்ள தெருவில் இந்த படுகொலை நிகழ்ந்துள்ளது. பேருந்தில் இருந்து இளைஞர் ஒருவர் இறங்கி வந்ததாகவும் அவருடன் வந்த இரண்டு நிஹாங் சீக்கியர்கள் இந்த கொலையை செய்ததாகவும் சொல்லப்பட்டிருந்த நிலையில் இதில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது சம்பவத்தன்று இளைஞர் ஒரு பைக்கில் பேருந்துக்கு அருகில் வந்து நின்றுள்ளார். பின்னர் அங்கு வந்த நிஹாங் சீக்கியர்கள் அவரை கொலை செய்துள்ளனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

பெண்ணுடன் பேசிய இளைஞர்
சிசிடிவி காட்சியில், இளம்பெண் ஒருவர் நடந்து வந்துகொண்டிருக்கிறார். அவருடன் பேசியவாறு இளைஞர் பைக்கில் வந்து கொண்டிருக்கிறார். அவர் அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார். ஆனால் அந்த பெண் வேறு திசையை பார்த்தவாறு பேசிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில்தான் அந்த வழியாக இரண்டு நிஹாங் சீக்கியர்கள் வந்துள்ளனர். இளைஞனையும், அப்பெண்ணையும் அவர்கள் கடந்து சென்றுள்ளனர். ஆனால் திடீரென அதில் ஒருவர் திரும்பி வந்துள்ளார்.

புதிய சிசிடிவி காட்சிகள்
அப்போது அந்த பெண்ணையும் இளைஞனையும் நிஹாங் சீக்கியர்கள் விசாரித்ததுபோல சிசிடிவி காட்சிகளில் தெரியவருகிறது. ஆனால் என்ன நடந்தது என்பது குறித்து காவல்துறை இன்னும் விளக்கமாக சொல்லவில்லை. இதன் பின்னர் அந்த இளைஞன் பைக்கில் புறப்பட தயாராகிறான். ஆனால் மற்றொரு நிஹாங் சீக்கியர் அந்த பைக்கை செல்லவிடாமல் தடுத்து நிறுத்துகிறார். இதன் தொடர்ச்சியாக என்ன நடந்தது என்பது குறித்து சிசிடிவி காட்சிகளில் இல்லை.

நேற்றைய காரணம்
ஆனால் நேற்று வெளியான சிசிடிவி காட்சிகளில் இளைஞன் நிஹாங் சீக்கியர்களை தாக்க முற்படுவதும் இதனை எதிர்த்து நிஹாங் சீக்கியர்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்ததும் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்ததில், இளைஞன் போதையில் இருந்ததாகவும், புகையிலையை மென்று கொண்டிருந்ததால் கோபமடைந்த நிஹாங் சீக்கியர்கள் இளைஞனை தாக்கியதாகவும் நேற்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள் இந்த கொலைக்கான காரணத்தை மேலும் குழப்பியுள்ளன.

வரலாறு
ஒவ்வொரு நிஹாங் சீக்கியரிடமும் நிச்சயம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாள் இருக்கும். மேலும் சில ஆயுதங்களையும் கூட அவர்கள் கொண்டிருக்கலாம். எப்போதும் நீல நிற உடையில் அவர்கள் இருப்பார்கள். இதுவே அவர்களை தனித்துவமாக அடையாளப்படுத்தும். இவர்கள் 10வது சீக்கிய குருவான குரு கோபிந்த் சிங்கின் காலத்தில் உருவானதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் ஒருவர் கொடுரமாக கொல்லப்பட்டத்திலிருந்து நிஹாங் சீக்கியர்கள் குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications